Home செய்திகள் லண்டனில் தமிழ் வர்த்தகரையும் 51 வயது கள்ளக்காதலியையும் ஆடைகள் அற்ற நிலையில் துரத்தி துரத்தி தாக்கிய...

லண்டனில் தமிழ் வர்த்தகரையும் 51 வயது கள்ளக்காதலியையும் ஆடைகள் அற்ற நிலையில் துரத்தி துரத்தி தாக்கிய மனைவி!!

லண்டன் புறநகர்ப் பகுதியான ஓர்பிர்ண்டன் பகுதியில் உள்ள தமிழ்கடை ஒன்றின் 45 வயதான முதலாளியும் கள்ளக்காதலியும் அவரது மனைவியால் அவரது வீட்டில் வைத்து கடுமையாகத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரியவருகின்றது. தனது வீட்டில் வைத்து 51 வயதான தமிழ் குடும்பப் பெண் ஒருவருடன் (விசேட தேவைக்குரியவர்) உல்லாசமாக இருந்த போதே மனைவியால் பிடிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவத்தால் அப்பகுதி சிறிது நேரம் அமளிதுமளியாகியுள்ளது.

குறித்த கடைக்கு வாடிக்கையாளராக தொடர்ச்சியாக வந்து கொண்டிருந்த தமிழ்க் குடும்பப் பெண் ஒருவருடன் குறித்த வர்த்தகர் பழகி அந்தரங்கத் தொடர்பில் இருந்துள்ளார். வர்த்தகரின் கடையில் வேலை செய்த வர்த்தகரின் மனைவியின் உறவினர் ஒருவர் இருவரது நடவடிக்கைகளையும் அவதானித்து வந்ததால் அலேட்டான வர்த்தகர் மனைவியின் உறவினரை திருட்டுப் பட்டம் சூட்டி கடையிலிருந்து நிறுத்தியுள்ளார். ஆனால் வர்த்தகரின் உள் நோக்கம் என்ன என்பதை அறிந்திருந்த அந்த உறவினர் வர்த்தகரின் கள்ளக்காதல் தொடர்பாக வர்த்தகரின் மனைவிக்கு போட்டுக் கொடுத்துள்ளார்.

தன்னை கடையில் விட்டு விட்டு அடிக்கடி வெளியேறும் வர்த்தகர் தொடர்பாக மனைவி ஏற்கனவே சந்தேகத்தில் இருந்துள்ளதாகத் தெரியவருகின்றது. இந் நிலையில் பிள்ளைகளும் தானும் வீட்டை விட்டு வெளியேறிய பின் வீட்டு படுக்கை அறை மற்றும் சமையலறை போன்றவற்றில் சில வித்தியாசங்களை மனைவி உணர்ந்திருந்தார். இது தொடர்பாக வர்த்தகரின் 15 வயதான மகளும் தனது தாய்க்கு தெரியப்படுத்தியுள்ளார். இதன் பின்னர் இணையம் மூலம் கண்காணிக்கும் கமரா ஒன்றை கணவனுக்குத் தெரியாது வீட்டில் மனைவி பொருத்தியதாகத் தெரியவருகின்றது. அத்துடன் கணவனின் வாகனத்திலும் கணவனுக்கு தெரியாது கண்காணிப்பு கருவி பொருத்தியிருந்தார்.

கமரா பொருத்தப்பட்டு ஓரிரு நாட்களின் பின்னர், மனைவியை கடைக்குள் விட்டுவிட்டு பொருட்கள் கொள்வனவு செய்யப் போவதாக கூறிச் சென்ற வர்த்தகர் தனது இரு பிள்ளைகளும் பாடசாலைக்கு செல்லும்வரை காத்திருந்து அவர்கள் வெளியே சென்ற பின் தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். இவற்றை மனைவி கடையிலிருந்து அவதானித்துள்ளார். வர்த்தகர் வீட்டினுள் சென்ற சிறிது நேரத்தில் பெண் ஒருவரும் வீட்டினுள் நுழைவதை மனைவி அவதானித்துள்ளார். அதன் பின், பெண்ணுடன் உல்லாசமாக இருந்த போதே அங்கு அதிரடியாகப் புகுந்த மனைவி இருவரையும் ஆடைகள் அற்ற நிலையில் கடுமையாகத் துரத்தி துரத்தி தாக்கியதாகத் தெரியவருகின்றது. இரத்தக் காயங்களுக்கு உள்ளான கள்ளக்காதலி அப்பகுதியிலிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பொலிசாருக்கு அறிவித்த போது அப்பகுதிக்கு வந்த பொலிசார் வீட்டுக்குள் புகுந்து விசாரணை செய்துள்ளதாகவும் தெரியவருகின்றது. இருப்பினும் கணவன் தான் மனைவியால் தாக்குதலுக்கு உள்ளான தகவலை பொலிசாருக்கு கூறாத காரணத்தால் பொலிசாா் அங்கிருந்து வெளியேறியுள்ளார்கள்.
.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply