Home செய்திகள் தலையில் தேங்காய் விழுந்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு சென்ற போதனா வைத்தியசாலையின் ஓய்வு பெற்ற...

தலையில் தேங்காய் விழுந்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு சென்ற போதனா வைத்தியசாலையின் ஓய்வு பெற்ற உத்தியோகத்தர் மரணம்!!

யாழ்ப்பாணத்தில் தலையில் தேங்காய் விழுந்ததால் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.கோப்பாய் வடக்கு பகுதியைச் சேர்ந்த தம்பிராசா ஜெயச்சந்திரன் (வயது 60) என்பவரே உயிரிழந்துள்ளார்.

இவர் கடந்த 12 ஆம் திகதி கொக்கத்தடி மூலம் தென்னை மரத்தில் தேங்காய் பிடுங்கியுள்ளார். இதன்போது தோங்காய் அவரது தலை மீது விழுந்துள்ளது.இந்நிலையில் அவர் தனது மனைவியிடம் விடயத்தை கூறியுள்ளார்.

அதன்பின்னர் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ப்பிக்கப்பட்டார். இதன்போது அவர் மயக்கமுற்றுள்ளார் . இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றுக் காலை உயிரிழந்துள்ளார்.அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

தம்பிராசா ஜெயச்சந்திரன் யாழ் போதனா வைத்தியசாலையில் நீண்டகாலமாக மருத்துவ ஆய்வு கூட உதவியாளராக பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதே வேளை யாழ் போதனா வைத்தியசாலையில் ஜெயச்சந்திரனுக்கு சிகிச்சை வழங்குவதில் ஏற்பட்ட தாமதமே உயிரிழப்புக்கு காரணம் என அடையாளம் தெரியாத இணையத்தளம் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply