அமெரிக்காவில் நியுஜெசி மாநிலத்தில் தனது 5 மற்றும் 7 வயதுடைய 2 மகன்களை கொலை செய்ததாக 35 வயதான பிரியதர்சினி நடராஜன் என்ற குடும்பப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை மாலை கில்ஸ்பறோ பகுதியில் உள்ள இந்தக் கொடூரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வேலையிலிருந்து வீட்டுக்குத் திரும்பிய கணவர் தனது இரு பிள்ளைகளும் மயக்க நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார். தனது மனைவி குழந்தைகளுக்கு ஏதோ செய்துவிட்டதாக அவர் பொலிசாருக்கு கூறியுள்ளார். அங்கு விரைந்த பொலிசார் படுக்கை அறையில் விழுந்து கிடந்த சிறுவர்களை மீட்டுள்ளார்கள். மருத்துவக் குழுவினர் அவர்களைக் காப்பாற்றுவதற்கு முயன்றும் சிகிச்ச பலனின்றி இரு சிறுவர்களும் பலியாகியுள்ளார்கள். பிரியதர்சினி மீது இரு கொலைக் குற்றச்சாட்டுக்களுடன் சட்டவிரோத ஆயுதம் வைத்திருந்ததாக மற்றொரு குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரியதர்சினியும் கணவரும் இந்தியாவைச் சொந்த இடமாகக் கொண்டவர்கள் என தெரியவருகின்றது.
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.













