யாழில் 17 வயதான மனைவியின் கடைசி தங்கையை கர்ப்பமாக்கிய பின் அயல் வீட்டில் வசித்து வந்த அதே வயதான மாணவனை கர்ப்பத்திற்கு காரணம் என மாட்ட நினைத்த 36 வயதான அரச ஊழியர் தொடர்பாக பொலிசாரிடம் மாணவனின் பெற்றோரால் முறையிடப்படவுள்ளது. யாழ் வலிகாமம் பகுதியில் மனைவி பிள்ளைகளுடன் வசித்து வரும் அரச ஊழியர் மனைவியின் சொந்த இடமான தென்மராட்சிப் பகுதிக்கு சனி, ஞாயிறு தினங்களில் சென்று தங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார். தென்மராட்சியில் மனைவியின் சீதன வீட்டிலேயே மனைவியின் கடைசி தங்கையும் தாயும் வசித்து வந்துள்ளனர்.கடைசி தங்கை தென்மராட்சியிலுள்ள பிரபல பாடசாலையில் உயர்தரப் பிரிவில் கற்று வந்துள்ளார். அதே பாடசாலையில் அரசஊழியரின் சீதன வீட்டுக்கு அருகில் வசித்து வந்த மாணவனும் அதே உயர்தரப் பிரிவில் மாணவியுடன் ஒன்றாக கற்று வந்துள்ளார். இவர்கள் இருவரும் நண்பர்கள் எனத் தெரிவருகின்றது. இவ்வாறான நிலையிலேயே மாணவி திடீர் சுகவீனமான நிலையில் சிகிச்சை பெறச் சென்ற போது அவர் கர்ப்பம் என்பது அறியப்பட்டுள்ளது. இதனையடுத்து தாயார் மற்றும் உறவுகள் மேற்கொண்ட விசாரனையின் போது கர்ப்பமாக்கியது யார் என்பது தொடர்பாக மாணவி மௌனம் காத்து வந்துள்ளார்.
இதனை சாட்டாக வைத்து மாணவியின் அத்தானான அரச ஊழியர் மாணவியின் நண்பனான அயலில் வசித்த 17 வயதுச் சிறுவனை கர்ப்பத்திற்கு காரணம் என குற்றச்சாட்டை வைத்ததாக தெரியவருகின்றது.இதன் காரணமாக இரு தரப்பினரும் மோதல் நிலைக்கு வந்துள்ளார்கள். இதனையடுத்து அரச ஊழியரின் மனைவி தனது தங்கையை முறையாகக் கவனித்து விசாரித்த போது கர்ப்பத்திற்கு காரணம் தனது கணவன் என்பதை அறிந்துள்ளார். இதன் பின்னர் அங்கிருந்து தனது தங்கையையும் அழைத்துக் கொண்டு அரச ஊழியரின் மனைவி மாயமாகியுள்ளார். பல நாட்களாக அப்பகுதிக்கு மாணவியோ அரச ஊழியர் குடும்பமே வரவில்லை. ஆனாலும் கர்ப்பமாக்கியது மாணவனே என அயலவர்கள் மற்றும் மாணவனின் நண்பர்கள் மாணவனை கேலி செய்வதை பொறுக்க முடியாத மாணவன் தற்கொலைக்கு முயன்றுள்ளான். இதனையடுத்து மாணவனின் பெற்றோர் இது தொடர்பாக பொலிசாரிடம் முறையிட ஆயத்தமாகியுள்ளார்கள். இவ்வாறான நிலையில் குறித்த கர்ப்பத்திற்கு காரணம் மாணவன் அல்ல என அரச ஊழியரின் மனைவி அப்பகுதிக்கு வந்து மாணவனின் பெற்றோருக்கு சொன்ன போது கர்ப்பமாக்கியது யார்? என அவர்கள் மனைவியை கேள்வி கேட்கத் தொடங்கியதால் அரச ஊழியரின் மனைவி அங்கிருந்து உடனடியாக வெளியேறிச் சென்றுள்ளார். இருப்பினும் மாணவனின் உறவுகளும் அயலவர்களும் மாணவி தொடர்பாக கடும் விசாரணையில் இறங்கவே மாணவியின் தாயாரால் தனது கடைசி மகளின் கர்ப்பத்திற்கு காரணம் தனது மருமகனே என கூறப்பட்டுள்ளது.
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.













