Home செய்திகள் ஜேர்மனியில் யாழைச் சேர்ந்த 62 வயது சிவராஜனை 53 வயதான மனைவி துர்கேசினி கள்ளக்காதலனும் சேர்ந்து...

ஜேர்மனியில் யாழைச் சேர்ந்த 62 வயது சிவராஜனை 53 வயதான மனைவி துர்கேசினி கள்ளக்காதலனும் சேர்ந்து கொல்ல முயற்சி! நீதிமன்றில் நடந்தது என்ன?

ஜேர்மனியில் நோர்த்ரைன் வெஸ்ட்பேலன் கொலோன் பகுதியில் வசித்து வரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தம்பதிகளுக்கிடையில் நடந்த மோதலில் கணவன் தலைப் பகுதியில் கடும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரியவருகின்றது.

யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகக் கொண்டவர்களும் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக ஜேர்மன் North Rhine மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்தவர்களுமான சிவராஜன் துர்கேசினி தம்பதிகள் தற்போது சண்டையிட்டு சிறை செல்லும் அளவில் உள்ளார்கள். இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளார்கள். இருவர் திருமணம் செய்துவிட்டார்கள் எனத் தெரியவருகின்றது. கடைசி மகள் தற்போது குறித்த பகுதியில் உள்ள பல்கலைக்கழகத்தில் கற்று வருகின்றார். கற்றல் நடவடி்ககைகளுக்காக மகள் தனியே வேறு பகுதியில் வாழ்ந்து வருகின்றார். இவ்வாறான நிலையில் தனித்திருந்த தம்பதிகளுக்கிடையில் சண்டை மூண்டுள்ளது.

சிவராஜன் தொற்றா நோய்களுக்கு இலக்கானவர். அத்துடன் மதுப்பழக்கத்திற்கும் அடிமையானவர். இருப்பினும் உணவு விடயத்தில் சில கட்டுப்பாடுகளுடன் செயற்பட்டு வந்துள்ளார். சிவராஜனுக்கு பொருத்தமான உணவுவகைகளை துர்கேசினி தயாரிப்பதில்லை எனவும் அதனால் சிவராஜன் துர்கேசினியுடன் பல தடவைகள் சண்டையிட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. இந் நிலையில் அப்பகுதியில் உள்ள தமிழ் கடையில் வேலை பார்க்கும் மட்டக்களப்பு ஊறணிப் பகுதியைச் சேர்ந்த 48 வயதான அச்சுதன் என்ற குடும்பஸ்தருடன் மனைவி நீண்ட கால நட்பாக இருந்துள்ளார். குறித்த கடைக்கு பொருட்கள் வாங்கச் சென்றதால் அந் நட்பு ஏற்பட்டுள்ளது. தொலைபேசியில் பொருட்களை ஓடர் செய்து துர்கேசினியின் வீட்டில் கொண்டு வந்து கொடுக்கும் அளவுக்கு நட்பு இருந்துள்ளது.

கடந்த தைப் பொங்களுக்கு முதல் நாள் துா்கேசினிக்கும் சிவராஜனுக்கும் இடையில் மோதல் மூண்டுள்ளது. மது போதையில் சிவராஜன் மனைவியைத் தாக்கியுள்ளார். இதனையடுத்து மனைவி தனது நண்பனான அச்சுதனுக்கு தொலைபேசியில் தகவல் கொடுத்துள்ளார். அங்கு விரைந்து வந்து அச்சுதன் மது போதையில் இருந்து சிவராஜனைக் கட்டுப்படுத்த முற்பட்டதாகவும் அதன் விளைவாக கீழே விழுந்த சிவராஜன் தலையில் காயமுற்றதாகவும் பொலிசாருக்கு துர்கேசினி வாக்குமூலம் கொடுத்துள்ளார். காயமுற்ற சிவராஜான உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அதன் பின்னர் சிவராஜன் கொடுத்த வாக்குமூலத்தில் மனைவியும் கள்ளக்காதலனான அச்சுதனும் சேர்ந்து தன்னை கட்டி வைத்து தலையணையால் அமுக்கி கொலை செய்ய முற்பட்டார்கள் என கூறியுள்ளார்.

இதன் காரணமாக அச்சுதனையும் மனைவியையும் உடனடியாக பொலிசார் கைது செய்து நீதிமன்றில் ஆயர்ப்படுத்தினர். நீதிமன்ற விசாரணைகளில் அச்சுதன் விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன் சிவராஜனின் மகளின் வாக்குமூல்தின் காரணமாக மனைவி துர்கேசினி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த தமிழர்கள் சிலர் கருத்து தெரிவிக்கையில் அச்சுதன் அப்பாவி எனவும் குடும்பச் சண்டைக்குள் மூக்கை நுழைக்கப் போய் தற்போது சிறைக்குள் உள்ளதாகவும் கூறுகின்றார்கள்.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply