கல்லடி பாலத்தில் பாய்ந்த யுவதி ஒருவர்சடலமாக மீட்கப்பட்டுள்ளார், தாளங்குடா சமூர்த்தி வங்கி வீதி பகுதியைச் சேர்ந்த 20 வயது இளங்கோ விதுசாயினி எனும் யுவதியே சடலமாக மீட்க்கப்பட்டுள்ளாா். இச் சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த யுவதி பிரதேச இளைஞர்கள் மற்றும் பொலிசாரினால் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
விதுசாயினி கடந்த வருடம் உயர் தர பரீட்சை எழுதியவர் எனவும் தெரிய வருகின்றது. மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.













