Home செய்திகள் மட்டக்களப்பில் மின்சாரம் தாக்கி இருவர் பலி!

மட்டக்களப்பில் மின்சாரம் தாக்கி இருவர் பலி!

மட்டக்களப்பு – ஏறாவூர் பிரதேசத்திற்குட்பட்ட பன்குடாவெளி புலையவெளியில் இன்று (29) காலை யானை வேலி மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.
பன்குடாவெளி புலையவெளியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான செல்வம் கர்ணன் (வயது-48) மற்றும் ஏறாவூர் 5ம் குறிச்சி வெற்றிவேல் வீதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயான தமிழ்ச்செல்வி செல்வகுமார் (வயது-43) ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இன்று (29) காலை புலையாவெளியை சேர்ந்த பெண்ணொருவர் மீன்வாங்குவதற்காக ஆற்றங்கரைக்கு சென்ற சமயம் ஆற்றங்கரையை அண்டிய பகுதிகளில் காட்டுயானைகளை தடுக்க போடப்பட்டிருந்த வேலியில் இணைக்கப்பட்டிருந்த மின்சாரத்தில் சிக்கி போராடியுள்ளார், இதனை நேரடியாக பார்த்த மீனவர் ஒருவர் ஓடிச்சென்று மின்வேலியில் சிக்கிய பெண்ணை காப்பாற்ற முற்பட்ட போது அவருக்கும் மின்சாரம் தாக்கிய நிலையில் இருவரும் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.
உயிரிழந்த இருவரும் செங்கலடி புலையவெளியைச் சேர்ந்தவர்கள் ஆகும். இவர்களது இழப்பு அக் கிராமத்தில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சடலங்கள் செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பாக கரடியனாறு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply