வவுனியா – வாரிக்குட்டியூர் பகுதியில் மோட்டர் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் இன்று தெரிவித்தனர்.
இவ் விபத்து நேற்று இடம்பெற்றுள்ளது.
வவுனியா, வாரிக்குட்டியூர் பகுதியில் மோட்டர் சைக்கிளில் இரு மாணவர்கள் பயணித்த போது மோட்டர் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த ஒரு மாணவன் மரணமடைந்துள்ளார்.
இவ் விபத்தில் வாரிக்குட்டியூர் பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிவகுமார் கரிஸ்ணன் என்ற மாணவனே மரணமடைந்தவராவார்.
விபத்து தொடர்பில் பூவரசன்குளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.













