Home செய்திகள் கிளிநொச்சியில் போதைப்பொருளுடன் 2 சிங்கள மாணவர்கள் பிடிபட்டனர்!

கிளிநொச்சியில் போதைப்பொருளுடன் 2 சிங்கள மாணவர்கள் பிடிபட்டனர்!

கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் இன்றையதினம் புதன்கிழமை காலை இரு சிங்கள மாணவர்கள் குஷ் வகை போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது ஜேர்மன் டெக் கல்வி நிலையத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் உடைமையில் இருந்த குஷ் வகை போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இரு மாணவர்களும் தென் இலங்கையில் இருந்து வந்து கல்வி கற்பதாகவும் ஒரு மாணவனின் உடைமையில் 1 கிராம் குஷ் பேதைப்பொருளும் மற்றைய மாணவரின் உடைமையில் 710 மில்லி கிராம் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட மாணவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக இன்றைய தினம் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply