யாழ் பல்கலைக்கழக பட்டதாரியான முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தரான குமுழமுனையைச் சேர்ந்த மயில்வாகனம். அபேதரன்(அபி) நேற்று யாழ் போதனா வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார்.
கடந்த 02.02.2026 அன்று கடும் காச்சல், சளி மற்றும் இருமல் என மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதி தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு, நிமோனியா காய்ச்சல் என அடையாளம் காணப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கடந்த 07.02.2026 அன்று யாழ்ப்பாணம் பொது மருத்துவமனையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு பின்னர் சாதாரண மருத்துவ பராமரிப்பில் பராமரிக்கப்பட்டு, பின்னர் நோய் நிலைமை அதிகரித்தன் காரணமாக மீண்டும் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம்(03.02.2026) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.



இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.













