Home செய்திகள் யாழ்பாணத்தில் விபத்து! அண்ணனும் தங்கையும் பலி!

யாழ்பாணத்தில் விபத்து! அண்ணனும் தங்கையும் பலி!

யாழ்ப்பாணம் – கொழும்புத்துறைப் பகுதியில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் மணியந்தோட்டத்தை சேர்ந்த அண்ணன் தங்கை பலி.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் சகோதரர்கள் இருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர்.

கொழும்புத்துறை பகுதியை அண்டிய பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற குறித்த விபத்தில் மணியந்தோட்டம் பகுதியை சேர்ந்த பிரட்லீ (வயது 24) அவரது சகோதரியான டிலக்ஸி (வயது 19) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

சகோதரர்களான இருவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது, பவுசருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply