Home செய்திகள் இலங்கை செய்திகள் யாழில் ஓய்வு பெற்ற 63 வயதான பெண் அதிகாரியுடன் தகாத உறவு என கணவன் சந்தேகம்!...

யாழில் ஓய்வு பெற்ற 63 வயதான பெண் அதிகாரியுடன் தகாத உறவு என கணவன் சந்தேகம்! 42 வயது குடும்பஸ்தர் மீது தாக்குதல்!!

யாழில் அயல் வீட்டில் வசிக்கும் குடும்பஸ்தர்மீது ஓய்வு பெற்ற 67 வயதான வயோதிபர் மூர்க்கத்தனமாகத் தாக்கியதில் குடும்பஸ்தர் தலையில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்க்பட்டுள்ளார். இச் சம்பவம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. ஓய்வு பெற்ற வயோதிபர் கொழும்பில் உள்ள தனியார் நிறுவணம் ஒன்றில் கணக்கியல் ஆய்வு அதிகாரியாக தற்போத கடமையாற்றி வருகின்றார். இவரது மனைவி நிர்வாக அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். இவர்களது பிள்ளைகள் இருவரும் வெளிநாட்டில் மருத்துவத்துறையில் கல்வி கற்று வருதாகத் தெரியவருகின்றது.

இந் நிலையில் யாழில் தனித்திருந்த ஓய்வு பெற்ற பெண் அதிகாரிக்கு அயல் வீட்டில் வசித்து வந்த குடும்பம் உறுதுணையாக இருந்துள்ளது. கொழும்பிலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை பெண் அதிகாரியின் கணவன் தனது வீட்டில் தங்கியிருந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் யாழ் நகரப்பகுதிக்கு சென்று திரும்பிய போது வீட்டின் சமையலறைக்குள் அயல்வீட்டு குடும்பஸ்தர் நிற்பதை கண்டுள்ளார். அதன் பின்னர் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சமையலறைக்குள் கிடந்த தேங்காயால் குடும்பஸ்தரின் மண்டையை அடித்து உடைத்துள்ளார் முதியவர். ஓய்வு பெற்ற பெண் அதிகாரி தடுக்க தடுக்க இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தலையில் காயமடைந்த குடும்பஸ்தரை அயலவர்கள் மீட்டு உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்கள்.

பெண் அதிகாரியின் வீடடில் காஸ் தீர்ந்திருந்ததால் சிலிண்டரை மாற்றிக் கொண்டு வந்து குறித்த குடும்பஸ்தர் பொருத்தியுள்ளார். அத்துடன் காஸ்குக்கரில் ஏற்பட்ட சிறுபழுதை சீர்செய்து கொண்டிருந்த போதே அங்கு வந்த முதியவர் குடும்பஸ்தருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.தற்போது பொலிஸ் விசாரணைகளை தடுத்து நிறுத்த ஓய்வு பெற்ற பெண் அதிகாரி குறித்த குடும்பஸ்தரின் மனைவி பிள்ளைகளைக் கெஞ்சிக் கொண்டிருப்பதாகத் தெரியவருகின்றது. குறித்த முதியவர் நிறை போதையில் அந் நேரம் நின்றதாக அயலவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply