
கிளிநொச்சி இடம்பெற்ற இந்தச் சம்பவம், இன்றைய இலத்திரனியல் யுகத்தில் வங்கி அட்டைகள் மற்றும் பணப் பரிமாற்றம் குறித்து நாம் எவ்வளவு அவதானத்துடன் இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம்.
உழைப்பால் உயர்ந்து வரும் ஒரு தேனீர் கடை உரிமையாளரின் பணத்தை, கரைச்சி பிரதேச சபை பணியாளர் ஒருவர் மதுபானத்திற்காகச் செலவிட்ட விதம் சமூகச் சீரழிவின் உச்சமாகும்.
கிளிநொச்சி பொதுச் சந்தைக்குள் தேனீர் கடை வைத்து கஷ்டப்பட்டு நெருப்புக்குள் நின்று உழைக்கும் ஒரு தேனீர் கடை உரிமையாளரின் வங்கி அட்டையை அவர் தொலைத்துவிட்டார். (ATM Card) அதனை கண்டெடுத்த ஒரு நபர், அதனை உரியவரிடம் ஒப்படைப்பதற்குப் பதிலாக, ஒரே நாளில் 68,796 ரூபாயை மதுபானத்திற்காகச் செலவு செய்துள்ள அதிர்ச்சித் தகவல் கிளிநொச்சியில் பதிவாகியுள்ளது.
ATM அட்டையை கண்டெடுத்த கரைச்சி பிரதேச சபையின் பணியாளர் ஒருவர் கிளிநொச்சியில் உள்ள மதுபான நிலையம் ஒன்றுக்குச் சென்று முதலில் “பியர் ரின்” ஒன்றை வாங்கி பணம் இருக்கிறதா என பரிசோதித்துள்ளார். அவரின் பரிசோதனையில் வெற்றி கிடைக்க, அந்தப் பணியாளர் காலை 8 மணி 09 நிமிடம் தொடக்கம் பிற்பகல் 3 மணி 02 நிமிடம் வரை குறித்த மதுபானசாலையில் மதுபானங்களை வாங்கி குடித்து மகிழ்ச்சியாக இருந்திருகின்றார். வேறு சிலருக்கும் கொடுத்திருகின்றார் . மதுபானசாலையின் காசாளருக்கும் 20 ரூபா (?) வழங்கியிருக்கின்றார். மொத்தமாக 68,796 ரூபாவை குறித்த அட்டையில் இருந்து செலவு செய்திருக்கின்றார்.
ஆனால் அட்டை தொலைந்தவுடன் உடடினயாக வங்கிக்குச் சென்று அதனை நிறுத்தியிருக்கலாம் ஆனால் தேனீர் கடைக்காரருக்கு அந்தளவுக்கு தகவல் தெரியாது.பின்னர் அவரது நண்பர் ஒருவர் மூலம் வங்கிச்சென்று அட்டையின் பயன்பாட்டை நிறுத்திவிட்டு மதுபானசாலைக்கு சென்று அங்குள்ள சிசிரிவி வீடியோவை பார்வையிட்டு குறித்த நபரையும் பிடித்துள்ளனர்.
குறித்த அட்டையினை பயன்படுத்தி காலை 8 மணி 09 நிமிடம் தொடக்கம் பிற்பகல் 3 மணி 02 நிமிடம் வரை 15 நடவடிக்கைகள் இடம்பெற்றிருக்கிறது. அதுவரை குறித்த அட்டையின் உரிமையாளர் எதுவும் செய்யாது இருந்திருக்கின்றார். அது அவரது தவறு. இரண்டாவது அட்டையினை எடுத்தவன் வீட்டுக்காக செலவு செய்திருந்தால் கூட ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் மதுபானசாலையில் செலவு செய்திருக்கின்றான். மூன்றாவது அவனிடம் இருந்து மதுபானசாலை காசாளர் 20 ரூபா பணத்தை வாங்கியது.
அட்டை தொலைந்தால் செய்ய #வேண்டியது Immediate Action
அட்டை தொலைந்தது தெரிந்த அடுத்த நிமிடமே, வங்கிக்குச் செல்லத் தாமதமானால் கூட, வங்கியின் 24 மணிநேர அவசர அழைப்பு இலக்கத்திற்கு (Hotline) அழைத்து அட்டையை முடக்க (Block) வேண்டும்.
#குறிப்பு: ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் வங்கிச் செயலிகள் (Mobile Apps) மூலம் ஒரு நொடியில் அட்டையைத் தாமே செயலிழக்கச் செய்ய முடியும். இது குறித்த அறிவை சக நண்பர்களிடம் அல்லது வங்கியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்!


இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.













