Home செய்திகள் இலங்கை செய்திகள் யாழில் ஏ.எல் கணிதப் பிரிவு மாணவன் ஒன்லைன் விளையாட்டுக்கு அடிமையான நிலையில் மரணம்! நடந்தது என்ன?

யாழில் ஏ.எல் கணிதப் பிரிவு மாணவன் ஒன்லைன் விளையாட்டுக்கு அடிமையான நிலையில் மரணம்! நடந்தது என்ன?

யாழ்ப்பாணத்தில் மாணவன் ஒருவர் இன்றையதினம் விபரீத முடிவெடுத்து உயிர்மாய்த்த சம்பவமானது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெல்லிப்பழை – வீமன்காமம் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

குறித்த மாணவன் கொக்குவில் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கணிதப் பிரிவில் கல்வி கற்று வந்துள்ளார்.

குறித்த மாணவன் தவிர்ந்த அவரது வீட்டில் உள்ள அனைவரும் விசேட தேவையுடையவர்களாகவே காணப்படுகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான சூழ்நிலையில் குறித்த மாணவன் தொலைபேசி கேமிற்கு அடிமையாகியதால் இன்று அதிகாலை தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.

அவர் உயிர்மாய்க்கும்போது வித்தியாசமான முறையில் ஆடை அணிந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மாணவனின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

மாணவனின் மரணம் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply