Home செய்திகள் இலங்கை செய்திகள் குமரன் சேரும் நித்தியாணந்தா சுவாமியும்!

குமரன் சேரும் நித்தியாணந்தா சுவாமியும்!

இது ஒரு சமூகவலைத்தள பதிவாகும்…

நான் சயன்ஸ் கோல் கொட்டிலில 2008 தொடக்கம் 2011 வரை படிச்ச காலத்தில, குமரன் சேரோட பிசிக்ஸ் கிளாஸ் க்கு தான் கட் பண்ணாம போறது,
மனுசன் கிளாஸில சொல்லுற எல்லாம் கொப்பிட மூலை முடக்குகளில எல்லாம் எழுதிடுவன், வீட்ட போய் திருப்பி படிக்கிறதும் இல்ல,
பௌதிகவியலை விளங்கி படியுங்கடா, பௌதிகவியல் விளங்கினவன் வாழ்க்கையில வெல்லுவான் பாருங்க, எண்டு மனுசனோட கதையளையும், இயற்கையில பௌதிகவியலோட தொழிற்பாடுகள், தேங்காய் எப்பிடி விழுகுது எண்டுறதில இருந்து , பிளைட் எப்பிடி பறக்கும் எண்டுறது வரை மனுசன் அலம்பி தள்ளி கிளாசை அப்பிடி தான் கொண்டு போகும்,
நாங்க படிச்ச நேரத்தில நித்தியானந்த சுவாமிகளோட லீலைகள் கசிஞ்ச நேரம், மனுசன் விடுமா, இதே பாணி கதை தான் இஞ்ச பாருங்க அவர் வந்து சின்ன சாமியார் அதான்டா அவரோட சுத்துமாத்துகளை வெளியில விடுறாங்க, இவர போல தான் மற்ற சடைதலை பெரிய சாமிமார்களும், அவங்கள பெரிய புள்ளியள் எண்டதால தான்டா அவங்களை வெளியில விடுறாங்க இல்ல,

நல்ல காலம் அந்த நேரங்களில பெருசா கமெரா போன் பாவனைகளோ, சமூக வலைத்தள பாவனைகளோ, ஒன்லைன் வகுப்புகளோ இல்ல,
இருந்திருந்தா இப்ப போல அப்பேக்கையும், வியாழக்கிழமை பக்தைகளும், ஞாயிற்றுகிழமை பக்தர்களுமா இந்தியாவோட “புட்டபர்த்தி” வரை பிரச்சனையை கொண்டு போயிருப்பாங்க,
அப்ப பாருங்க…..

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply