யாழ் சுன்னாகம் பகுதியில் உள்ள விளையாட்டுக்கழக உறுப்பினர்களுக்கும் அப்பகுதியில் உள்ள சனசமூகநிலைய உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று மாலை கைகலப்பு சம்பம் ஒன்று இடம்பெற்று சனசமூகநிலைய கதிரைகள் சில சேதமாக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. குறித்த சனசமூகநிலைய உறுப்பினர்கள் சீமானின் ஆதரவாளர்கள் எனவும் அதே சனசமூக எல்லைக்குள் உள்ள விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் விஜய் ஆதரவாளர்கள் எனவும் தெரியவருகின்றது.
கடந்த சில நாட்களுக்கு முன் குறித்த விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் சிலர் சனசமூக முன்றலில் விஜயின் பனர் ஒன்றை கட்ட முற்பட்ட போது சனசமூக உறுப்பினர்களால் அது தடுத்த நிறுத்தப்பட்டதுடன் சீமானுக்கு ஆதரவான பனர் ஒன்று அங்கு கட்டப்பட்டது. ஆனால் அன்று இரவே அது இனந்தெரியாதோரால் அறுத்து எடுக்கப்பட்டிருந்தது. இவ்வாறான நிலையில் இன்று மாலை அச் சனசமூநிலைய முன்றலில் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் விஜயின் வெற்றிக்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் முகமாக வெடி கொழுத்தி ஆரவாரம் செய்த போது அது தொடர்பாக சனசமூகநிலைய உறுப்பினர்கள் இருவர் அவர்களை எச்சரித்துள்ளனர்.
இதனையடுத்து அங்கு முறுகல் நிலை ஏற்பட்டு சனசமூக நிலைய உறுப்பினர்கள் இருவருவரும் விஜய் ரசிகர்களால் அறைக்குள் பூட்டி வைக்கப்பட்டு அதே அறைக்குள் வெடியும் கொழுத்தி போட்டதாகத் தெரியலருகின்றது. இதனையடுத்து அங்கு விரைந்த அயலவர்கள் விஜய் தரப்பு ஆதரவாளர்களை துரத்தியதுடன் சனசமூகநிலைய உறுப்பினர்களையும் அறையிலிருந்து வெளியே கொண்டு வந்துள்ளார்கள். இச் சம்பவத்தால் அப்பகுதியில் தற்போதும் பதற்றம் நீடிப்பதாகத் தெரியவருகின்றது.
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.














