இது ஒரு சமூகவலைத்தள பதிவாகும்.
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் பின்புறம் காணப்பட்ட நீண்ட கால வேம்பு ஒன்றை வைத்தியசாலை நிர்வாகம் வெட்டி அகற்றியுள்ளது.
பல ஆண்டுகளாக துயரம் சுமந்து வரும் மக்களுக்குத் தன் தழையக் கைகளால் நிழல் தந்து தேற்றிய அந்தப் பெருவிருட்சம், இன்று அதிகாரத்தின் ஒற்றை ‘றப்பர் முத்திரை கோரிக்கையால் சடலமாக வீழ்த்தப்பட்டுள்ளது. “ஆபத்து” என்ற போர்வையில், முறையான ஆய்வுகளோ அல்லது கிளைகளை மட்டும் தரிக்கும் மாற்றுத் திட்டங்களோ இன்றி, பசுமைப் படுகொலை அரங்கேறியிருக்கிறது; அந்த வேம்பு வெறும் மரம் மட்டுமல்ல, அருகில் இருந்த கட்டிடத்திற்கும், பிரேத அறைக்கு வரும் சாமானியர்களுக்கும் இயற்கையளித்த ஒரு குளிர்சாதனக் கேடயம் என்பதை அங்கிருக்கும் வைத்தியர்களே கவலையுடன் சாட்சியப்படுத்துகின்றனர்.
ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் காணப்பட்டதனால் உரிய திணைக்களத்தின் அனுமதியுடன் வெட்டப்பட்டதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆனால் அங்குள்ள பல வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களின் கருத்துப்படி குறித்த மரம் ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில் காணப்படவில்லை எனத் தெரிவித்தனர்.
இதில் வேடிக்கை என்னவெனின் மரத்தை வெட்டிய பின்னர் அடுத்து வந்த நாட்களில் அருகில் உள்ள கட்டடத்தின் கூரைக்கு தண்ணீர் ஊற்றி வெப்பத்தின் தாக்கத்தை தணிக்கை செய்துள்ளனர். இது மூளையை வெட்டிவிட்டு முடிக்கு மசாஜ் செய்வது போன்றுள்ளது.
இதனை தவிர அரசாங்க மரக் கூட்டுத்தாபனத்திற்க ஒரு திணைக்களத் தலைவர் கடித தலைப்பில் மரம் வெட்டுவதற்கு கோரிக்கை கடிதம் எழுதி றப்பர் முத்திரையிட்டு கொடுத்துவிட்டார் சரி உடனே அவர்களும் வந்து வெட்டி எடுத்துக்கொண்டு சென்றுவிடுவார்கள் கழிவுகளை அந்த இடத்திலேயே விட்டுவிட்டு. குறித்த மரம் உண்மையிலேயே ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில் இருக்கிறதா? வெட்டாமல் பாதுகாக்க முடியாது எனவெல்லாம் ஆராய்வது இல்லை எனவும் சூழலியலாளர்கள் தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வருகின்றனர்.
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.













