யாழ் வலிகாமம் பகுதியில் கணவனின் தாக்குதலுக்கு உள்ளாகி முகம் மற்றும் தலை ஆகிய பகுதிகளில் காயமடைந்த இளம் குடும்பப் பெண் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார். ஆட்டோச்சாரதியான கணவன் விஜய் ரசிகர் எனவும் இன்று தமிழகத்தின் முதல்வராக பதவியேற்கும் நடிகர் விஜய் பதவியேற்கும் அதே நேரத்தில் நண்பர்களுக்கு மது விருந்து அளிப்பதற்கு கணவன் ஆயத்தமானார் எனவும் மனைவி தெரிவித்துள்ளார். தான் ஆடு வளர்த்து அதனை விற்று வைத்திருந்த 60 ஆயிரம் ரூபா பணத்தை பார்ட்டிக்கு தருமாறு கணவன் கேட்டதாகவும் அதனை கொடுக்க மறுத்த போது ஏற்பட்ட வாய்த் தர்க்கத்தின் பின் கணவன் தன்னை தும்புத்தடியால் தாக்கியதாகவும் மனைவி தெரிவித்துள்ளார். இதே வேளை மனைவியைத் தாக்கிய பின் நேற்று மாலை தானே மனைவியை ஆட்டோவில் ஏற்றி வந்து வைத்தியசாலையில் அனுமதித்த கணவன் மனைவி சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் போது மருந்து கட்டுவதற்காக மனைவியின் கழுத்தில் இருந்து கழற்றப்பட்ட சங்கிலியை வாங்கிக் கொண்டு மனைவியை அம்போ என அங்கேயே விட்டுவிட்டு சென்றுவிட்டதாகவும். சிகிச்சை அளிக்கப்பட்ட மருத்துவச் செலவுகள் இல்லாத நிலையில் மனைவி நின்று அங்கு அந்தரித்துக் கொண்டிருந்த போது வைத்தியசாலை ஊழியர்கள் பொலிசாரிடம் முறையிடப் போவதாக சாரதிக்கு தொலைபேசி மூலம் எச்சரித்த பின்னரே மனைவிக்கான சிகிச்சை பணத்தை கட்டிவிட்டு மனைவியை அழைத்துச் சென்றதாக தெரியவருகின்றது.
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.














