முல்லைத்தீவு சிலாவத்தை சந்தியில் எதிரே விரைந்த இருசக்கர மோட்டார் வாகனத்துடன் மோதியதில் இருசக்கர மோட்டார் வாகனத்தில் பயணம் செய்த இருமாணவர்கள் காயமடைந்தனர் விபத்தை ஏற்படுத்திய பஸ் சாரதி பஸ்ஸை நிறுத்தாமல் தப்பி ஓடி அளம்பில் இராணுவ முகாமின் அருகில் நிறுத்தி விட்டு இராணுவ முகாமில் தஞ்சம் அடைந்தனால் முகாமை சுற்றி மக்கள் ஒன்று சேர்ந்து எதிர்ப்பை தெரிவித்தனர் இது தொடர்பான விசாரணையை செம்மலை பொலிஸார் மேற்கொள்கின்றனர்.விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சாரதி மது போதையில் இருப்பது தெரியவந்துள்ளதாகவும் கைது செய்யப்பட்ட சாரதியை நாளை முல்லைத்தீவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.















