வெளிநாடு அனுப்புவதாகக் கூறி நூற்றுக்கணக்கான மக்களிடம் பெருந்தொகை பணத்தை மோசடி செய்து குச்சவெளி பொலிஸார் மற்றும் அடியாட்களுடன் சுகபோகத்தை அனுபவித்து வந்த மொஹமட் ஆதில் என்பவர் குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று(19) கைது செய்யப்பட்டு குச்சவெளி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், இவரை மேலதிக விசாரணைகளுக்கு அழைத்து செல்ல கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் திருகோணமலைக்கு விரைந்துள்ளனர்.
இவர் மீது இதுவரை 64 பேர் குச்சவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.














