யாழ் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் இன்று முற்பகல் கோர விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
மருதங்கேணியில் இருந்து கட்டைக்காடு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வெற்றிலைக்கேணி கோரியடி பகுதியில் விபத்துக்குள்ளானது.
விபத்தில் காயமடைந்த இரு இளைஞர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருதங்கேணி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த இளைஞர்கள் கட்டைக்காடு பகுதியை சேர்ந்தவர்கள் என்பதுடன் சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.














