Home செய்திகள் இலங்கை செய்திகள் யாழில் காதலித்து திருமணம் செய்த கணவன் சீதனம் கேட்டு தொல்லை! 19 வயது ஜென்சி மரணம்!

யாழில் காதலித்து திருமணம் செய்த கணவன் சீதனம் கேட்டு தொல்லை! 19 வயது ஜென்சி மரணம்!

சீதன கொடுமையால் இளம் குடும்பப் பெண்ணொருவர் நேற்றையதினம் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.

யாழ்ப்பாணம் – நாவாந்துறையை சேர்ந்த ஜெயச்சந்திரன் ஜென்ஸி (வயது 19) என்பவரே இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த பெண் இரண்டு வருடங்களாக காதலித்து, நான்கு மாதங்களுக்கு முன்னர் ஒருவரை திருமணம் செய்துள்ளார். இருப்பினும் குறித்த பெண்ணின் கணவரது தாயார் அவரை ஏற்கவில்லை.

பின்னர் 25 பவுண் தங்க நகையும், வீடும் சீதனமாக கேட்டு நச்சரித்துள்ளார். குறித்த பெண்ணின் குடும்பம் பொருளாதார ரீதியாக நலிவுற்ற குடும்பம் என்பதால் அதனை வழங்க முடியவில்லை.

பின்னர் தனது மகனை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கு முயற்சித்தவேளை அந்த பெண் தனது கணவனை வெளிநாட்டுக்கு செல்ல வேண்டாம் என கூறியுள்ளார். தனது தாயார் கேட்ட சீதனம் தராவிட்டால் தான் வெளிநாட்டுக்கு போகப்போவதாக அந்த பெண்ணின் கணவரும் கூறியுள்ளார்.

இதனால் மன விரக்தியில் அந்த பெண் நேற்று காலை தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply