Home செய்திகள் வவுனியா பாடசாலை காதல்!! லண்டனில் கணவன், பிள்ளைகளை விட்டு விட்டு கனடா சென்ற 42 வயது...

வவுனியா பாடசாலை காதல்!! லண்டனில் கணவன், பிள்ளைகளை விட்டு விட்டு கனடா சென்ற 42 வயது வைதேகிக்கு நடந்த கதி!

தனது கணவன் மற்றும் இரு வயதுககு வந்த மகள்களை விட்டுவிட்டு லண்டனிலிருந்து கனடா சென்ற 42 வயதான வைதேகி மனநலம் குன்றிய நிலையில் ரொறொன்ரே பகுதியில் உள்ள CMHA யில் தங்க வைக்கப்பட்டுள்ளார். வவுனியாப் பகுதியைச் சேர்ந்த 42 வயதான வைதேகிக்கு பாடசாலை பருவத்தில் காதல் இருந்துள்ளது. அந் நேரத்தில் தனது வயதான மாணவன் ஒருவனுடன் ஏ.எல் படிக்கும் போது வீட்டை விட்டு வெளியேறி பின்னர் பெற்றோரால் காதலனிடமிருந்து பிரிக்கப்பட்டு கொழும்பு சென்று அங்கு உயர் கல்வி கற்றுள்ளார். அதன் பின்னர் பரதநாட்டிய மேற்படிப்புக்காக இந்தியா சென்ற வைதேகிக்கு 23 வயதில் லண்டனில் கல்வி கற்று தொழில் புரிந்து வந்த தமது உறவுக்காரனான ஒருவரை பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணம் முடித்து லண்டனில் வசித்து வந்த வைதேகிக்கு 15 வயது மற்றும் 13 வயதில் மகள்கள் உள்ளனர்.

இவ்வாறான நேரத்திலேயே வைதேகி தான் பாடசாலையில் கற்கும் போது காதலித்து ஓடியவனுடன் மீண்டும் சமூகவலைத்தளம் ஊடாகத் தொடர்பை ஏற்படுத்தியுள்ளார். ஜெயதேவன் அனுசாந்தன் என்ற 42 வயதான கனடாவில் வசித்து வரும் 3 பிள்ளைகளின் தந்தையான முன்னாள் காதலனுடன் வாழ முற்பட்டு லண்டனிலிருந்து கனடாவுக்கு கடந்த வருட தொடக்கத்தில் வைதேகி சென்றதாகத் தெரியவருகின்றது. அங்கு அனுசாந்தன் தனது மனைவிக்குத் தெரியாது வைதேகிக்கு சகல வசதிகளும் செய்து கொடுத்து அவளுடன் குடும்பம் நடாத்தியுள்ளான்.

அனுசாந்தனின் கள்ளக்காதல் செயற்பாடுகளை அவனது மனைவி கண்டு பிடித்து சண்டை தொடங்கியுள்ளது. அத்துடன் அனுசாந்தனின் கடைசி மகள் இருதய நோய்வாய்ப்பட்ட நிலையில் அனுசாந்தன் வைதேகியை கைகழுவி விட்டதாகத் தெரியவருகின்றது. இதனையடுத்து நடுத்தெருவில் நின்ற வைதேகி அதனால் மதுபோதைக்கு அடிமையாகி அதனால் மனநலன் குன்றியதாகத் தெரியவருகின்றது. தற்போது ரொறொன்ரோ பகுதியில் உள்ள மனநலன் காப்பகத்தில் வைதேகி தங்கவைக்கப்பட்டுள்ளாள். அவளை மீண்டும் நல்ல நிலைக்கு கொண்டு வருவதற்காக கொழும்பில் உள்ள உறவுகள் கடும் முயற்சிகள் மேற்கொண்டுள்ளதாகத் தெரியவருகின்றது. மனநலன் குன்றிய நிலையில் உள்ள வைதேகியை பராமரிப்பதற்காக வைதேகியின் சகோதரி கொழும்பில் இருந்து கனடா செல்ல முயற்சித்தும் கனடா விசா பெறுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக அச் செயற்பாடு தடைப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

வைதேகியின் பிள்ளைகள் தமக்கு தமது தாயார் வேண்டாம் என கொழும்பில் உள்ள வைதேகியின் உறவினர்களுக்கு நேரடியாகக் கூறி தொடர்பை துண்டித்துள்ளார்கள்.

லண்டனில் மாணவிகளுக்கு பரதநாட்டியம் கற்றுக் கொடுத்து நல்ல நிலையில் இருந்த வைதேகி கள்ளக்காதல் காரணமாக மனநலன் குன்றிய நிலைக்குச் சென்றுள்ளது அவளது உறவுகளை பெரும் கவலைக்கு உள்ளாக்கியுள்ளது.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply