திருமணம் செய்து மூன்று வருடங்களான நிலையில் இளம் குடும்பஸ்தர் விபரீதமுடிவால் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியில் இன்று அதிகாலை 3:00 மணியளவில் தனது வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார் , யாழ் போதனா வைத்தியசாலையில் சுகாதார முகாமைத்துவ சேவைகள் உத்தியோகத்தர் தங்கராசா ராஜ்குமார் வயது 30 என்ற உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார். திருமணம் செய்து மூன்று வருடங்களான நிலையில் மனைவியுடன் வாழ்ந்து வரும் நிலையில் இவ் துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது சடலம் உடற்கூற்று சோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.





