Home செய்திகள் யாழில் மி்ன்சாரம் தாக்கி தேவபாலன் மரணம்!!

யாழில் மி்ன்சாரம் தாக்கி தேவபாலன் மரணம்!!

யாழில் இன்றையதினம் மின்சாரம் தாக்கி ஆணொருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த புவனேந்திரன் தேவபாலன் (வயது 47) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவருக்கு பிறப்பிலேயே கை, கால்கள் என்பன செயற்பாடுகள் அற்று காணப்பட்டது. இன்று காலை 10 மணியளவில் தனது வாயினால் மின்சார ஆழி குதையினுள் மின் இணைப்புக்காக வயரினை செருக முற்படும்போது அவர்மீது மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here