Home செய்திகள் இலங்கை செய்திகள் யாழில் மின்தடை நேரத்தில் வீடுகளுக்குள் புகுந்து முகமூடிக் கொள்ளையர்கள் தாக்குதல்!! நகைகள் கொள்ளை!

யாழில் மின்தடை நேரத்தில் வீடுகளுக்குள் புகுந்து முகமூடிக் கொள்ளையர்கள் தாக்குதல்!! நகைகள் கொள்ளை!

அராலி வடக்கு பகுதியில் மின்சாரம் தடைப்பட்ட நேரத்தில் துணிகரக் கொள்ளைச் சம்பவம் ஒன்று நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

நேற்றிரவு மின்சாரம் தடைப்பட்டபோது நால்வர் கொண்ட கும்பல் ஒன்று அராலி வடக்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்து வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடாத்தியுள்ளது. பின்னர் அந்த வீட்டில் இருந்த 10 பவுண் தங்க ஆபரணங்களை அந்த கும்பலானது கொள்ளையடித்துச் சென்றுள்ளது.

குறித்த கும்பலானது முகங்களை மூடி காட்டியவாறு வந்ததால் அடையாளம் காண முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. வட்டுக்கோட்டை பொலிஸார் இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply