Home செய்திகள் இலங்கை செய்திகள் குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி பயணித்த படகு விபத்து! பலர் மூழ்கி காணாமல் போனதாக அச்சம்!

குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி பயணித்த படகு விபத்து! பலர் மூழ்கி காணாமல் போனதாக அச்சம்!

குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி பயணித்த படகு ஒன்று விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த படகானது இன்று (16.08.2026) பி.ப 3.00 மணியளவில் பயணிகளை ஏற்றியவாறு குறிகட்டுவான் பகுதியில் இருந்து நெடுந்தீவு நோக்கி பயணித்தது.

இதன்போது அந்த படகானது நயினாதீவுக்கு அண்மித்த பகுதியில் உள்ள ஐயனார் முடக்கு என்ற இடத்தில் கவிழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் அந்த படகில் பயணித்த 10 பேர் கடலில் தத்தளித்துக்கொண்டு இருந்தவேளை நயினாதீவு மீனவர்களால் காப்பாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை அந்த படகில் எத்தனை பேர் பயணித்தார்கள் என்ற விபரம் தெரியவரவில்லை. இந்நிலையில் யாராவது காணாமல் போயுள்ளார்களா என்ற கோணத்தில் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply