யாழ்ப்பாணம் – மன்னார் வீதியில் கேரதீவு சங்குப்பிட்டி பாலப் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பூநகரி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய மன்னாரைச் சேர்ந்த 31 வயதான ஆர்னோல்ட் அன்ரனி என்பவரே உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோர மதகுடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உடற்கூற்று பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.















