Home செய்திகள் இலங்கை செய்திகள் யாழில் உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் 3 பிள்ளைகளின் தாயாரான வடக்கு மாகாணசபை திட்டமிடல்...

யாழில் உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் 3 பிள்ளைகளின் தாயாரான வடக்கு மாகாணசபை திட்டமிடல் உத்தியோகத்தர் பலி.!

யாழ்ப்பாணம் – தென்மராட்சி, மீசாலை புத்தூர் சந்திப் பகுதியில் இன்று (06) இடம்பெற்ற வீதி விபத்தில் மூன்று பிள்ளைகளின் தாயாரான 35 வயதான சோபிகா வரதன் உயிரிழந்துள்ளார்.

பிரதிப் பிரதம செயலகம் – திட்டமிடல் அலுவலகத்தின் கீழ் கள அபிவிருத்தி உத்தியோகத்தராக பணியாற்றிவருகின்றார்.

உழவு இயந்திரமும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

பாதுக்காப்பாகவும், போக்குவரத்து விதிமுறைகளுக்கு உட்பட்டு வாகனங்களை செலுத்துவதன் மூலம் விபத்துகளையும் உயிரிழப்புகளையும் குறைத்துக்கொள்ள முடியும்.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply