நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய 6 பேர் கொண்ட காவாலிக் கும்பல் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளது.
நெல்லியடி, முடக்காடு பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்த கும்பல், மகன், மகள், பெற்றோர் மீது கடுமையான தாக்குதல் நடத்தியது. இதில் பாதிக்கப்பட்ட இருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.















