Home செய்திகள் இலங்கை செய்திகள் அம்பாறையில் வாகனக் கதவை திறந்ததால் ஏற்பட்ட விபரீதம்!! இளைஞன் பலி! 4 பேர் படுகாயம்!

அம்பாறையில் வாகனக் கதவை திறந்ததால் ஏற்பட்ட விபரீதம்!! இளைஞன் பலி! 4 பேர் படுகாயம்!

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மற்றும் நிந்தவூர் பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற இரு வேறு வீதி விபத்துக்களில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதுடன், நால்வர் படுகாயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கல்முனை, தரவை கோயில் பகுதிக்கு அருகில் நேற்று இடம்பெற்ற விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த சகோதரர்கள் இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கல்முனை, ஹனிபா வீதியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவரும் வழமைபோல் துவிச்சக்கர வண்டியில் கல்முனை சந்தைக்குச் சென்று கொண்டிருந்தபோது வீதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனம் ஒன்று திடீரென கதவை திறந்ததால் அதில் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் படுகாயமடைந்த 23 வயதுடைய முஹம்மட் இக்பால் அகில் உயிரிழந்துள்ளதுடன், அவரது 19 வயதுடைய சகோதரரான பஸ்ஹாம் காயமடைந்துள்ளார்.

இதேவேளை, நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில் நேற்று (23) இரவு இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் அதிவேகமாகப் பயணித்த இருவர், எதிரே மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்தவருடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் படுகாயமடைந்த 58 மற்றும் 16 வயதுடைய இருவர் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மற்றுமொருவர் மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இரு விபத்துக்கள் தொடர்பிலும் கல்முனை மற்றும் நிந்தவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply