Home செய்திகள் பாட்டனாருடன் வயலுக்கு சென்ற சிறுவன் உழவு இயந்திரம் குடைசாய்ந்ததில் உயிரிழப்பு..!

பாட்டனாருடன் வயலுக்கு சென்ற சிறுவன் உழவு இயந்திரம் குடைசாய்ந்ததில் உயிரிழப்பு..!

வயல் வேலைக்குச் சென்று திரும்பிக்கொண்டிருந்த சிறுவன் உழவு இயந்திரம் குடைசாய்ந்ததில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று (14) இரவு 7.00 மணியளவில் பொலன்னறுவை மனம்பிட்டிய, மலியதேவபுர கிராமத்தில் தனது பாட்டனாருடன் வயல் வேலைக்குச் சென்று வீடுநோக்கி திரும்பி வரும்போது அவர்கள் பயணித்த உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மன்னம்பிட்டி, சிங்ஹஉதாகமயைச் சேர்ந்த ஆர்.ஜே.எம். அஷேன் யோமார என்ற 15 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

விபத்து சம்பவம் தொடர்பான விசாரணைகளை மன்னம்பிடிய பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here