Home செய்திகள் புதுக்குடியிருப்பில் தலைகீழாகப் புரண்ட வாகனம்! வீடியோ

புதுக்குடியிருப்பில் தலைகீழாகப் புரண்ட வாகனம்! வீடியோ

வற்றாப்பளை பகுதியில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி அரிசி ஏற்றி பயணித்துக் கொண்டிருந்த லொறி வாகனம், ஜங்கன்குளம் பகுதியில் உள்ள வளைவில் திரும்ப முற்பட்டபோது கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி தடம்புரண்டுள்ளது.
நேற்று  (17.11.2025) பிற்பகல் இடம்பெற்ற குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தற்போது நிலவும் அதிக மழை மற்றும் சாலையின் ஈரப்பதம் , வாகனத்தின் அதிக வேகம் காரணமாக தடம் புரண்டிருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன. எனினும் வாகனத்தில் பயணித்தவர்களுக்கு எதுவித ஆபத்துகளும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
May be an image of one or more peopleMay be an image of one or more people, car, motorcycle, grass and roadMay be an image of scooter, motorcycle, road and text that says "BJL 7828 05"No photo description available.
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply