Home செய்திகள் யாழில் தனது பெறாமகளின் நகையை திருடிய போதைக்கு அடிமையான சித்தப்பா!

யாழில் தனது பெறாமகளின் நகையை திருடிய போதைக்கு அடிமையான சித்தப்பா!

தமது சகோதரனின் குழந்தையின் கையில் இருந்த தங்க ஆபரணத்தை திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (23) சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த திருட்டு சம்பவம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இணுவில் பகுதியில் இடம்பெற்ற நிலையில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, குழந்தையின் சித்தப்பாவான, 32 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் போதைப்பாவனைக்கு அடிமையாகியுள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here