பிரான்சில் பயங்கரம்: தம்பியைக் கழுத்தறுத்துக் கொன்று, தாயைச் சுத்தியலால் தாக்கிய 16 வயது சிறுவன்!
பாரிஸ் நகரின் 19-வது வட்டாரத்தில் (19e arrondissement) நடந்த குடும்ப வன்முறைச் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 16 வயதுடைய சிறுவன் ஒருவன் தனது 14 வயது தம்பியைக் கொடூரமான முறையில் கொலை செய்துவிட்டு, பெற்ற தாயையும் சுத்தியலால் கடுமையாகத் தாக்கியுள்ளான். கடந்த மே 25 திங்கட்கிழமை நள்ளிரவு தாண்டி (செவ்வாய்க்கிழமை அதிகாலை) சுமார் 3:10 மணியளவில், அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்குச் சென்ற அந்த 16 வயது சிறுவன், தனது தாயையும் தம்பியையும் கொன்றுவிட்டதாகக் கூறித் தானாகவே முன்வந்து சரணடைந்துள்ளான். தகவலறிந்த காவல்துறையினரும் அவசர...
புங்குடுதீவு கடலில் ஒதுங்கிய சடலம் வேலு உதயகுமார் என அடையாளம் காட்டிய உறவினர்!
கடந்த 25 ஆம் திகதி தொழிலுக்காகச் சென்ற நிலையில் காணாமல் போயிருந்த குருநகர் கடற்றொழிலாளர் ஒருவர் புங்குடுதீவுக் கடலில் இன்று (27) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சடலம் இன்று முன்னிரவு புங்குடுதீவு 3ஆம் வட்டாரக் கடற்பரப்பில் கரை ஒதுங்கியுள்ளது. அத்துடன் சென்.பற்றிக்ஸ் வீதி குருநகர் பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய வேலு உதயகுமார் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முன்பதாக கடந்த 25 ஆம் திகதி தொழிலுக்காகச் சென்ற குறித்த தொழிலாளி கரைதிரும்பவில்லை என பொலிசாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. கடும் தேடுதல் மேற்கொண்டும் குறித்த கடற்றொழிலாளி மீட்கப்படாதிருந்த நிலையில் இன்று...
மட்டக்களப்பிலுள்ள ஹோட்டல் தீ விபத்தில் 2 குழந்தைகள் மூச்சுத்திணறி உயிரிழப்பு!
மட்டக்களப்பிலுள்ள ஹோட்டல் அறையில் ஏற்ப்பட்ட தீ விபத்தில் பதுளையிலிருந்து சிகிச்சைக்காக வந்து தங்கியிருந்த இரண்டு குழந்தைகள் மூச்சுத்திணறி உயிரிழப்பு மட்டக்களப்பில் உள்ள விடுதியொன்றின் அறையில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக, மூச்சுத்திணறல் ஏற்பட்டு இரண்டு சிறு குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது இந்த அனர்த்தத்தில் 05 மற்றும் 03 வயதுடைய இரண்டு குழந்தைகளே உயிரிழந்துள்ளனர். பதுளைப் பகுதியிலிருந்து மருத்துவத் தேவை ஒன்றிற்காக மட்டக்களப்புக்கு வருகை தந்த குடும்பமொன்றே, அங்குள்ள விடுதியொன்றில் தங்கியிருந்துள்ளது. இச்சம்பவம் நடந்த வேளையில், குறித்த குழந்தைகளின் தாய் மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால், தந்தை தங்கியிருந்த...
கிளிநொச்சியில் 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கியவருக்கு 10 வருட சிறை!
பதின்ம வயதுச் சிறுமியொருவரை பாலியல் வன்புனர்விற்கு உட்படுத்திய குற்றவாளிக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றம் பத்து வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பதினான்கு வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்புணவிற்கு உட்படுத்திய குற்றச் சாட்டின் கீழ் பொலிசாரால் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். கிளிநொச்சி பொலிஸார் இச் சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபரையும் சான்றுப் பொருட்களையும் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியிருந்தனர். தொடர்ந்து குறித்த வழக்கானது ஆரம்பத்தில்...
மன்னாரில் தீயில் எரிந்து மூன்று பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு!
மன்னார் உப்புக்குளம் கஷ்மீர் வீதியில் நேற்று (26.05) செவ்வாய்க்கிழமை ,இரவு 7 மணி அளவில் மண்ணெண்ணெய் விளக்குத் தவறி விழுந்து ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பிள்ளைகளின் தாய் உயிரிழந்துள்ளார். ரிஷாலா பானு (46) என்ற பெண்ணே இவ்வாறு உயி*ரிழந்துள்ளார். சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில் அவர்களது வீட்டில் மின்சாரம் இல்லாத காரணத்தால் மண்ணெண்ணெய் விளக்கைப் பயன்படுத்தி வந்துள்ள நிலையில், விளக்கை ஏற்றும் போது குறித்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. உயி*ரிழந்த பெண்ணிற்கு வலிப்பு நோய் தொடர்ச்சியாக இருந்து வந்ததாகவும் சம்பவத்தின் போது அவரது கணவர் மற்றும் மூன்று...
பிருத்தானியாவில் 31 வயதான இலங்கைத் தமிழ் குடும்பப் பெண்ணின் அதிரடி! கடைக்குள் கள்ளர்களுக்கு நடந்த கதி!
பிரிட்டானியாவில் திருடர்களை கடையினுள்ளே பூட்டி அதிரடி காட்டிய இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையின் உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டு, சிறுமியாக இருந்தபோது பிரிட்டானியாவுக்கு அகதியாகக் குடிபெயர்ந்தவர் கம்ஷா சிவகரன் என்ற 31 வயதுப் பெண். இவரது துணிகர செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். இவர் வடக்கு ஷீல்ட்ஸ் (North Shields) பகுதியில் கடை ஒன்றை கடந்த நான்கு ஆண்டுகளாகத் தனியாக நடத்தி வருகிறார். தனியாக இருக்கும் தன்னை எளிய இலக்காகக் கருதி, கடந்த நான்கு வருடங்களாகச் சில சமூக...
சற்று முன் பரபரப்பு! ஹற்றனில் தம்பதியை இரட்டைக் கொலை செய்த நபர் வைத்தியசாலையிலிருந்து தப்பி ஓட்டம்!
அட்டன் டிக்கோயா பகுதியில் வயோதிப தம்பதியினர் இரட்டைக் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபர், கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (27) செவ்வாய்க்கிழமை அதிகாலை சிறைச்சாலை அதிகாரிகளின் கண்களின் மண்ணைத் தூவி விட்டு தப்பியோடியுள்ளார். மனோஜ் அல்லது மனோஹரன் என்றழைக்கப்படும் பதுளை தெமோதரை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய சந்தேக நபர் கடந்த சனிக்கிழமை 23 ஆம் திகதி பொதுமக்களின் உதவியோடு பொகவந்தலாவை பகுதியில் கைது செய்யப்பட்டார். இவர் நீதவான் முன்னிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆஜர்படுத்தப்பட்ட போது இவரை...
ட்ராக்டர் சந்திக்கு அருகில் டிப்பர் மோதி ஆட்டோ நசுங்கியது! 2 இளைஞர்கள் பலி! வீடியோ
அம்பாறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ட்ராக்டர் சந்திக்கு அருகில், டிப்பர் வாகனமொன்று முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். புத்தங்கல பகுதியிலிருந்து ஹோல்மன்கல நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனம், பாலிகா சுற்றுவட்டம் பகுதியிலிருந்து அம்பாறை பொது வைத்தியசாலை நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியுடன் மோதி நேற்றிரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பின்னால் பயணித்த மேலும் மூவர் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு உயிரிழந்தவர்கள் தடயந்தலாவ மற்றும் நவகம்புர...
இன்றைய (27.05.2026) இராசி பலன்கள்
மேஷம் இன்று தொழில் வியாபாரம் நன்றாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்திசாதூரியத்துடன் நடந்து கொண்டு நன்மை அடைவார்கள். நீண்ட நாட்களாக இருந்த குடும்பம் தொடர்பான பிரச்சனைகள் சாதகமாக முடியும். கணவன், மனைவிக்கிøடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகள் கல்விக்காக பாடுபட வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9 ரிஷபம் இன்று எதிர்பார்த்த ஆர்டர்கள் வந்து சேரும். அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பதவிகள் கூடுதல் பொறுப்பு கிடைக்கப்பெறுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி...
யாழில் கோயிலில் மோதல்! படுகாயமடைந்தவரின் உடலில் 150 தையல்கள் போடப்பட்டது!
யாழ்ப்பாணம் - கரவெட்டி பகுதியில் இரண்டு நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முரண்பாடாக மாறி, மதுப் போத்தலால் குத்தப்பட்டு ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, ஆலய வேள்வி நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த இரண்டு நண்பர்கள் மது அருந்திய நிலையில் அவர்களுக்கிடையில் வாய் தர்க்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வாய்த் தர்க்கம் தீவிரமடைந்த நிலையில், ஒருவர் மீது கண்ணாடி போத்தலால் சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் படுகாயமடைந்த நபர் உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம்...









