19 நாட்களேயான கைக்குழந்தையை 1 லட்சத்திற்கு விற்க முயன்ற 6 பேர் கைது!
புத்தளம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் 19 நாட்களேயான கைக்குழந்தை ஒன்றை ஒரு இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்ய முயன்ற 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தக் கைது நடவடிக்கை ஆனமடுவ – அடிகம பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், குழந்தையை வாங்குவதற்காக அழைத்து வரப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வான் ஒன்றும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் குழந்தையின் தாய், அவரது மூத்த சகோதரர், அவரது மனைவி, குழந்தையை வாங்கத் தயாராக இருந்த தம்பதியினர் மற்றும் வானின் சாரதி ஆகியோர் அடங்குவதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். குழந்தையை விற்க முயன்ற...
யாழ்ப்பாணம் – கண்டி A9 வீதியில் நள்ளிரவில் பயங்கரம் – சொகுசு கெப் வண்டியுடன் மோதி காட்டு யானை பரிதாப பலி!
ஏ-9 பிரதான வீதியில் நள்ளிரவில் அரங்கேறிய கொடூர விபத்தில் காட்டு யானை ஒன்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், சொகுசு கெப் வாகனம் ஒன்று முற்றாக நசுங்கி உருக்குலைந்துள்ளது! நடந்தது என்ன? இதோ முழுமையான விபத்து அறிக்கை நள்ளிரவில் வீதிக்கு வந்த எமன்! கண்டியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி அதிவேகமாக பயணித்துக் கொண்டிருந்த சொகுசு கெப் (Cab) வண்டி, திங்கட்கிழமை (25) இரவு மரதன்கடவல, தோணிகல பகுதியை கடந்தபோது இந்த அதிர்ச்சி விபத்து நிகழ்ந்துள்ளது. கண்டினியூஸாக பயணித்த வாகனத்தின் குறுக்கே, திடீரென காட்டு யானை ஒன்று வீதியைக் கடக்க முயன்றுள்ளது. கண்ணிமைக்கும்...
மாணவியைக் காப்பாற்றச் சென்ற பாடசாலை அதிபர் கடலில் மூழ்கி துயர மரணம்; மாணவி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!
படல்கும்புர பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியர்களும் மாணவர்களும் கல்விச் சுற்றுலா ஒன்றினை மேற்கொண்டு, நேற்றுமுன்தினம் (25) மாலை கிரிந்த கடற்கரைக்குச் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் நீராடிக்கொண்டிருந்த போது, 14 வயதுடைய மாணவி ஒருவர் கடலில் மூழ்கியதைக் கண்ட பாடசாலை அதிபர், உடனடியாகச் செயற்பட்டு அந்த மாணவியைக் காப்பாற்றுவதற்காகக் கடலில் குதித்துள்ளார். இதன்போது, அவர்கள் இருவரும் பலத்த கடல் அலையினால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதனைக் கண்ட அங்கிருந்த உயிர் பாதுகாப்புப் பிரிவினரும் (Life Guards) பிரதேசவாசிகளும் இணைந்து, நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் இருவரையும் மீட்டு தெபரவெவ ஆதார...
அம்பாறையில்17 வயதான 2 சிறுவர்களுடன் ஓரினச்சேர்க்கையில் தமிழ் முதலாளி! அதனை வீடியோவாக எடுத்து முதலாளியிடம் பணம் பறித்த சிறுவர்கள்! முதலாளி விளக்கமறியலில்! நடந்த என்ன?
அம்பாறை கல்முனையில் 17 வயதுச் சிறுவன் ஒருவருக்குப் பணம் தருவதாகக் கூறி, ஓரினச்சேர்க்கை மூலம் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 56 வயது வர்த்தகரை, எதிர்வரும் ஜூன் மாதம் 08 ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அம்பாறை , கல்முனை வர்த்தக நிலையம் ஒன்றில், நீண்டகாலமாக இத்தகைய சட்டவிரோதப் பாலியல் செயற்பாடுகள் இடம்பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. இதனை அறிந்த 17 வயது மதிக்கத்தக்க இரு சிறுவர்கள் குறித்த வர்த்தக நிலையத்திற்குச் சென்றுள்ளனர். இதன்போது,...
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நடக்கும் பிண வியாபாரம்! பரபரப்பு தகவல்கள் இதோ! Video
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நடக்கும் பிண வியாபாரம்! பரபரப்பு தகவல்கள் இதோ
இன்றைய (26.05.2026) இராசி பலன்கள்
மேஷம் இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்தினரால் பாராட்டு கிடைக்க பெறுவார்கள். ஆனால் அலைச்சல் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்க மனம் விட்டுபேசுவது நன்மை தரும். உறவினர்கள் வருகை இருக்கும். அவர்களிடம் நிதானமாக பேசுவது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6 ரிஷபம் இன்று குடும்பத்தினரிடம் கோபம் காட்டாமல் அன்பாக பேசுவது நல்லது. மகிழ்ச்சி உண்டாகும். எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். வீண் அலைச்சல் உண்டாகும். செயல்திறமை அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட...
மட்டக்களப்பில் மீன் பிடிப்பதற்கு தனியாக சிறிய படகில் கடலுக்குச் சென்ற 19 வயது விஜயகாந் சடலமாக மீட்பு !
படகில் தனியாக கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்று காணாமல் போன களுதாவளை இளைஞன் சடலமாக மீட்பு மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளையிலிருந்து கடலில் படகில் மீன் பிடிக்க சென்று காணாமல்போன 19 வயது இளைஞனின் சடலம் இன்று (25) திங்கட்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது. கல்முனைக்குடி கடற்பகுதியில் வைத்து தேடுதல் முன்னெடுத்துக்கொண்டிருந்த மீனவர்களினால் மீட்கப்பட்டு களுதாவளைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த சனிக்கிழமை (23) மீனவர் ஒருவர் கடலுக்கு சென்று காண நிலையில் அப் பகுதி மீனவர்கள் பொதுமக்களால் தேடுதல் முன்னெடுக்கப்பட்டு வந்தது சடலமாக மீட்கப்பட்டவர் மட்டு களுவாஞ்சிகுடி பொலிஸ்...
வித்தியா கொலை குற்றவாளியின் சடலத்தை வாங்க மறுக்கும் மனைவி! எதற்காக?
யாழ்ப்பாண சிறைச்சாலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை உயிரை மாய்த்துக்கொண்ட புங்குடுதீவு மாணவி கொலை குற்றவாளியின் சடலத்தை மனைவி வாங்க முன் வராத நிலையில், இறுதி சடங்கை அரச செலவில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புங்குடுதீவு பகுதியை சேர்ந்த பூபாலசிங்கம் ஜெயக்குமார் (வயது 46) எனும் மரண தண்டனை கைதி யாழ்ப்பாண சிறைச்சாலையில் தனது உயிரை மாய்த்து கொண்டுள்ளார். இறுதி சடங்கினை மேற்கொள்ள முடியாது அதனை அடுத்து வைத்தியசாலையில் சடலம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், சடலத்தை ஜெயக்குமாரின் மனைவி , அடையாளம் காட்டியதை அடுத்து , சட்ட வைத்திய அதிகாரி...
கிளிநொச்சியில் இளம் குடும்பப் பெண் விபத்தில் பலி! வீடியோ
கிளிநொச்சி, உருத்திரபுரம் - கரடிபோக்கு வீதியில் இன்று (25) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாடசாலை முடிந்து மகளை அழைத்துக்கொண்டு தாயொருவர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, அதிவேகமாக வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பாதிப்பு தாயார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்தை ஏற்படுத்திய இளைஞர்களில் ஒருவரும் காயமடைந்துள்ளார். சம்பந்தப்பட்ட இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாகச் சென்றதே விபத்திற்குக் காரணம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். நடவடிக்கை: கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இஞ்சினியரின் தாய், மனைவி, 14 வயது மகள் ஆகியோருடன் அந்தரங்க தொடர்பில் இருந்த யாழ்ப்பாண சாரதி பிரதாபன் எங்கே? கொலையா?
கொழும்பு நாவலப் (Nawala) பகுதியில் சிங்களத் தொழிலதிபர் ஒருவரின் வாகனச் சாரதியாகப் பணியாற்றி வந்த 33 வயதான யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் பிரதாபன் என்பவனை பொலிசார் தேடி வருவதாகத் தெரியவருகின்றது. பிரதாபன் கடந்த 10 வருடங்களாக தொழிலதிபரின் வாகனச் சாரதிகளில் ஒருவராக கடமையாற்றியுள்ளதுடன் தொழிலதிபரின் மகனான டுபாயில் பொறியியலாளராக உள்ளவரின் மனைவி மற்றும் பிள்ளையையும் பல்வேறு இடங்களுக்கு காரில் கொண்டு திரியும் சாரதியாகவும் பணியாற்றி வந்துள்ளான். தனது முதலாளியின் மனைவியான தற்போது 65 வயதுடைய பாட்டியுடன் 10 வருடங்களுக்கு மேலாக பிரதாபன்...










