லண்டனில் கைக் காசுக்கு குறைந்த ஊதியத்தில் ஊழியரை வேலைக்க அமர்த்தியமை! இலங்கை புகையிலை விற்றமை! இலங்கைத் தமிழனான பாஸ்கரலிங்கத்தின் கடைக்கு தடை!!
பிரித்தானியாவில் லண்டனில் சட்டவிரோதமாக ஒருவரை வேலைக்கு அமர்த்தி குறைந்த சம்பளம் வழங்கிய குற்றச்சாட்டில், இலங்கை தமிழருக்கு சொந்தமான பிரபல அங்காடி ஒன்றின் உரிமம் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, சோதனையின் போது அங்கு தடை செய்யப்பட்ட போதைப்பொருள் மற்றும் வரி செலுத்தப்படாத மதுபானங்களும் மீட்கப்பட்டுள்ளன. கடந்த 2025 நவம்பர் 29 அன்று, ஈலிங் கவுன்சில் அதிகாரிகள் மற்றும் குடிவரவு அதிகாரிகள் அதிரடி சோதனை ஒன்றை நடத்தியிருந்தனர். இந்த சோதனையின் போது பிரித்தானியாவில் தங்குவதற்கோ அல்லது வேலை செய்வதற்கோ சட்டப்பூர்வ உரிமை இல்லாத ஒரு நபர்...
கனடாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கைத் தமிழன் மரணம்!
கனடாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட இலங்க்கை தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடுகடத்தப்பட்ட நபை தாயகத்தில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. கடந்த 2010 ஆம் ஆண்டு குறித்த நபர் mv sun sea கப்பலில் கனடா சென்று ஏதிலி கோரிக்கையை விடுத்திருந்தார். 2010 ஆகஸ்ட் 13 அன்று கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியை mv sun sea கப்பல் சென்றடைந்தது. mv sun sea கப்பலில் சென்ற 492 இலங்கை தமிழர்கள் கனடாவில் தஞ்சம் கோரி இருந்தனர். இந்நிலையில் குறித்த நபரின் தஞ்சகோரிக்கை நிராகரிக்கப்பட்டு நாடுகடத்தப்பட்ட நிலையில் கடந்த 17...
சுகாதாரச் சீர்கேடு! யாழ் திருநெல்வேலி அம்மாச்சி உணவகம் இழுத்து மூடப்பட்டது!
சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கி வந்ததாக திருநெல்வேலி பகுதியில் அமைந்துள்ள அம்மாச்சி உணவகம் பொது சுகாதார பரிசோதகரினால் மூடப்பட்டுள்ளது. அம்மாச்சி உணவகம் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கி வருவதாக , பொது சுகாதார பரிசோதகருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் , அம்மாச்சியில் திடீர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்த வேளை , ஏற்கனவே இனம் காணப்பட்ட சுகாதார பிரச்சனைகள் தொடர்பிலான அறிவுறுத்தல்களை மீறி உணவகம் தொடர்ந்து இயங்கி வந்தமையால் , குறித்த பிரச்சனைகளை சீர் செய்யும் வரையில் உணவகத்தை மூட பணித்துள்ளார். அதேவேளை அம்மாச்சி உணவக உணவு கையாள்வோருக்கான விழிப்பணர்வு...
யாழில் சீதனம் தராவிட்டால் உன்னை விட்டு விட்டு வெளிநாடு போவேன் என கூறிய காதல் கணவன்! மனைவி ஜென்ஸி மரணம்!
யாழ்ப்பாணம் நாவாந்துறையை சேர்ந்த ஜெயச்சந்திரன் ஜென்ஸி (வயது 19) என்பவரே இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண் இரண்டு வருடங்களாக மட்டக்களப்பைச் சேர்ந்த ஒருவரை காதலித்து, நான்கு மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துள்ளார். இருப்பினும் குறித்த பெண்ணின் கணவரது தாயார் அவரை ஏற்கவில்லை. பின்னர் 25 பவுண் தங்க நகையும், வீடும் சீதனமாக கேட்டு நச்சரித்துள்ளார். குறித்த பெண்ணின் குடும்பம் பொருளாதார ரீதியாக நலிவுற்ற குடும்பம் என்பதால் அதனை வழங்க முடியவில்லை. பின்னர் தனது மகனை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கு முயற்சித்தவேளை அந்த...
யாழில். உணவகத்திற்குள் பூனை வளர்த்தமை உள்ளிட்ட குற்றம் – உணவகத்திற்கு சீல் வைக்க உத்தரவு!
யாழ்ப்பாணத்தில் உணவகம் ஒன்றினுள் பூனை வளர்த்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்கு உரிமையாளருக்கு 50 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்த மன்று , உணவகத்திற்கு சீல் வைக்கவும் உத்தரவிட்டுள்ளது. ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில், சுதுமலை பொதுச் சுகாதார பரிசோதகர் ம.ஜெயபிரதீப் மேற்கொண்ட திடீர் பரிசோதனையின் போது, உணவகத்தில் இருந்து கழிவுநீரை வெளியில் விட்டு துர்நாற்றம் ஏற்படுத்தியமை, கடைக்குள் பூனை வளர்த்தமை, அழுகிய முட்டை இறைச்சியை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்திருந்தமை மற்றும் திறந்த வெளியில் சமைத்தமை போன்ற சுகாதார சீர்கேடுகளுக்கு எதிராக உணவாக உரிமையாளருக்கு எதிராக...
கிளிநொச்சி இரணைமடு குளத்திற்கு அருகில் சைக்கிளில் சென்றவரை துரத்தித் துரத்தி தாக்கிய யானை!
கிளிநொச்சியில் யானை தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்த நபர் ஒருவர் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரணைமடுக்குளத்தில் தூண்டில் மீன் பிடிப்பதற்காக சென்ற 65வயதானவர் மீது யானை தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவமானது நேற்று காலை இடம்பெற்றுள்ளது. தூண்டிலில் மீன் பிடிப்பதற்காக சைக்கிளில் சென்ற போது யானை தாக்கியுள்ளது. தாக்குதலுக்குள்ளானவரை உடனடியாக மீனவர்கள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
மட்டு’வில் சம்பவம்! காதல் கணவன் இன்னொரு பெண்ணுடன் இருந்ததை நேரில் பார்த்த 22 வயது சுமேதா தவறான முடிவெடுத்து பலி!
மட்டக்களப்பை சேர்ந்த 22 வயதான இளம் குடும்பப் பெண் சுமேதா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. இவர்களுக்கு 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், குடும்ப வாழ்க்கை நடத்தி வந்தபோது கணவருக்கு மற்றொரு பெண்ணுடன் நீண்ட நாட்களாக தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த தொடர்பு 19.05.2026 அன்று மனைவிக்கு தெரிய வந்ததை தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதத்தில், அந்த பெண்ணையே திருமணம் செய்வதாக கணவர் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான இளம் பெண் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்…...
இன்றைய (22.05.2026) இராசி பலன்கள்
மேஷம் இன்று பிள்ளைகளிடம் கோபம் காட்டாமல் அன்பாக பேசுவது நல்லது. மகிழ்ச்சி உண்டாகும். எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். வீண் அலைச்சல் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7 ரிஷபம் இன்று செயல்திறமை அதிகரிக்கும். உயர்கல்வி கற்பவர்கள் கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது. வாக்கு வன்மையால் ஆதாயம் உண்டாகும். தைரியம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9 மிதுனம் இன்று சகோதரர்களால் நன்மை உண்டாகும். காரிய வெற்றி ஏற்படும். பணவரத்து கூடும்....
பிருத்தானியாவிலிருந்து இலங்கைக்கு சென்ற புலம்பெயர் தமிழர்களுக்கு நடந்த கதி! கொழும்பில் முறைப்பாடு! நடந்தது என்ன?
பிரித்தானியாவின் லண்டனிலிருந்து இலங்கைக்குச் சென்ற தமிழர்கள் உட்படப் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கொழும்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கொழும்பு மற்றும் லண்டன் இடையிலான இருவழிப் பயணத்திற்கான விமானப் பயணச்சீட்டுகளைக் (Tickets) கொள்வனவு செய்த பயணிகளுக்குச் சேவை வழங்க மறுத்ததாக, கத்தார் ஏர்வேஸ் (Qatar Airways) நிறுவனத்திற்கு எதிராகக் கொழும்பு கோட்டைப் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. டனாடா டிராவல்ஸ் அண்ட் டூர்ஸ் (Donata Travels and Tours) என்ற பயண முகவர் நிறுவனம் இந்த மோசடி குறித்த முறைப்பாட்டைச் செய்துள்ளதாகப் பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் 2...
கனடாவில் ரவுடித்தனம் செய்த ஈழத்தமிழனான பிரவீன் உட்பட்ட 3 பேரை கனடா பொலிஸ் தேடுகின்றது! நடந்தது என்ன?
கனடாவில் வன்முறையில் ஈடுபட்ட இலங்கை தமிழ் இளைஞன் உட்பட மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரொறன்ரோ (Toronto) நகரின் மையப்பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் நடந்த வன்முறை தாக்குதல் மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியுள்ளது. எனினும், இந்த தாக்குதல் தொடர்பாக பின்வருவோர் கைது செய்யப்பட்டுள்ளனர்: பிரவீன் ஜெகதீஸ்வரன் (30 வயது) கும்ரன் பண்டால் (25 வயது) ஹர்னீத் தின்சா (25 வயது) மேலும் இந்த வழக்கில்...










