மதுபோதையில் சிக்கிய அரச பேருந்து நடத்துநர் – வவுனியாவில் பரபரப்பு

0

முல்லைத்தீவிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான (இ.போ.ச) பேருந்தின் நடத்துநர் மதுபோதையில் கடமையாற்றிய குற்றச்சாட்டில், அவரிடமிருந்த பயணச்சீட்டுப் புத்தகம் மற்றும் பணம் என்பன இ.போ.ச அதிகாரிகளால் அதிரடியாகக் கையகப்படுத்தப்பட்டுள்ளன. வவுனியா புதிய பேருந்து தரிப்பிடத்திலிருந்து காலை 6.30 மணிக்கு முல்லைத்தீவு நோக்கி தனது பயணத்தினை ஆரம்பித்த குறித்த இ.போ.ச பேருந்து, முல்லைத்தீவை சென்றடைந்துள்ளது. பின்னர், மீண்டும் முல்லைத்தீவு பேருந்து தரிப்பிடத்திலிருந்து காலை 10.30 மணியளவில் வவுனியாவை நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது. இப்பயணத்தின் போது, பேருந்தின் நடத்துநர் மதுபோதையில் இருப்பதாக வடக்கு...

பொலிஸாருடன் தள்ளுமுள்ளு; இழுத்துச் செல்லப்பட்ட விமல் வீரவன்ச! கொழும்பில் பெரும் பதற்றம்

0

இலங்கையில் இன்று (மே 18) போர்வீரர்களை (ரணவிரு) நினைவுகூரும் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்துவதற்குச் சென்ற முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அங்கு பெரும் பரபரப்பும் அமைதியற்ற சூழலும் ஏற்பட்டது. நாடாளுமன்றத்திற்கு அருகிலுள்ள ரணவிரு நினைவுத் தூபிக்கு மலரஞ்சலி செலுத்துவதற்காக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச, சிவில் சமூக அறிஞர்கள் மற்றும் கலைஞர்கள் உள்ளிட்ட குழுவினர் இன்று பிற்பகல் அங்கு வருகை தந்திருந்தனர். இருப்பினும், விமல் வீரவங்ச உள்ளிட்ட குழுவினருக்கு ரணவிரு நினைவுத் தூபிக்கு அருகில் சென்று...

கண்ணீரில் நனைந்தது முள்ளிவாய்க்கால்! Video

0

இறுதி யுத்தத்தின் போது உயிர்நீத்தோரை நினைவுகூர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்றைய தினம் திங்கட்கிழமை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படுகிறது. முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உயிரிழந்தோரின் உறவினர்களால் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது பங்கேற்ற மக்கள் தமது உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.  

வீட்டின் பரணில் ஏறிய அப்பா தடக்கி 3 வயது மகன் மீது விழுந்தார்! பரிதாபகரமாக மகன் பலி!

0

கம்பளை பகுதியில் வீட்டின் பரணிலிருந்து நிலைதடுமாறி விழுந்த தந்தையின் உடலின் கீழ் நசுங்கிய 3 வயது சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயரச் சம்பவம் கம்பளை, நாரன்விட்ட - ஆடியா கடவத, பிஹில்லதெனிய பகுதியில் இடம்பெற்றுள்ளது. வீட்டினுள் பொருட்களை வைப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த பரணில் ஏறி, மோட்டார் சைக்கிளை கழுவுவதற்கான தண்ணீர்க் குழாயை எடுப்பதற்காக தந்தை மேலே ஏறியுள்ளார். அந்த நேரத்தில், தந்தைக்குப் பின்னால் சென்ற 3 வயது சிறுவன் பரணின் கீழ் நின்றபடி அவரைப் பார்த்துக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, பரணிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த...

மன்னாரில் ஆடுகளை பார்க்கச் சென்ற அனோஜன் சடலமா மீட்பு!

0

மன்னார் பகுதியில் தனது ஆடுகளைப் பட்டியில் அடைக்கச் சென்ற இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மன்னார், கள்ளிக்கட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய அனோஜன் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர் கடந்த சனிக்கிழமை (16) வீட்டிலிருந்து ஆட்டுப்பட்டி அமைந்துள்ள இடத்திற்குச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. அச்சமயம் அப்பகுதியில் கடும் மழை பெய்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் பின்னர், ஆட்டுப்பட்டிக்கு அருகில் அவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த இளைஞருக்கு அடிக்கடி வலிப்பு நோய் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படும் நிலையில், சம்பவம் இடம்பெற்ற...

விசேட வைத்திய நிபுணருடன் அந்தரங்க தொடர்பு வைத்த 24 வயது தாதி! கலியாணம் செய்த பின் கணவருடன் சேர்ந்து வைத்தியரை அச்சுறுத்தி லட்சக்கணக்கான பணம் பறிப்பு! கைதானது எப்படி?

0

கண்டியில் உள்ள பிரதான மருத்துவ நிலையமொன்றில் தனியார் சேவையில் ஈடுபட்டுள்ள விசேட வைத்தியர் ஒருவரை அச்சுறுத்தி, 60 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பணத்தைக் கப்பமாகப் பெற்றனர் என்ற குற்றச்சாட்டில்,தாதியும் கணவனும் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்தில் அதே மருத்துவ நிலையத்தில் பணிபுரிந்த முன்னாள் செவிலியர் ஒருவரும் அவரது கணவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தெல்தெனிய பிராந்திய சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தினரால் இவர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட விசேட வைத்தியருக்கும் 24 வயதுடைய குறித்த செவிலியருக்கும் இடையில் சில காலம் நெருக்கமான உறவு இருந்ததாகக்...

யாழில் நீரில் மூழ்கி சிறுவன் பலி!

0

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நீச்சல் தடாகத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழந்துள்ளான். சிறு வயதில் தந்தையை இழந்த குறித்த சிறுவன் தாயாரின் அரவணைப்பில் வளர்ந்து வந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. புலோலி மேற்குப் பகுதியைச் சேர்ந்த திலீபன் சந்தோஷ் (வயது- 13) என்ற சிறுவன் நீரில் ழூழ்கிப் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். வல்வெட்டித்துறையிலுள்ள ரேவடி நீச்சல் தடாகத்தில் நீச்சலில் ஈடுபட்டிருந்த வேளையே , எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான். சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இன்றைய (18.05.2026) இராசி பலன்கள்

0

மேஷம் இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளை தட்டி கொடுத்து எதையும் செய்ய சொல்வது நல்லது. உங்கள் கருத்துகளுக்கு மதிப்பில்லாமல் போகலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9 ரிஷபம் இன்று பணவரத்து திருப்தி தரும். வீண் பேச்சை குறைப்பது நன்மை தரும். வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி சென்று விடுவது நல்லது. மற்றவர்களுக்கு உதவும் போது கவனமாக இருப்பது நல்லது. மனதில் மகிழ்ச்சி...

யாழில் சற்று முன் வாள் வெட்டுத் தாக்குதலில் 5 பேர் படுகாயம்!

0

யாழ் இணுவில் செட்டி வீதி அண்ணா சனசமூக நிலையப் பகுதியில் இரு குழுக்கள் இடையே இன்று இரவு 7 மணியளவில் நடந்த வாள்வெட்டு தாக்குதலில் ஐந்து பேர் படுகாயம் அடைந்துள்ளதாகத் தெரியவருகின்றது. குறித்த தாக்குதலில் காயமடைந்த காவாலிகள் தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

யாழில் சுவிஸ் நாட்டிலிருந்து வந்து தனது வீட்டில் தங்கியிருந்தவர் கொலையான திடுக்கிடும் CCTV காட்சிகள்

0

சுவிற்சர்லாந்து நாட்டில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சென்ற முதியவர் ஒருவர் முகமூடி அணிந்த கொள்ளைக் கும்பலால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டு, அவரது நகைகளும் பெருந்தொகைப் பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சோகச் சம்பவம் யாழ்ப்பாணத்தில் பதிவாகியுள்ளது. யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட #சண்டிலிப்பாய் பகுதியைச் சேர்ந்த வல்லிபுரம் சந்திரசேகரம் (வயது 67) என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவராவார். நீண்ட காலமாகத் தனது குடும்பத்துடன் சுவிஸ் நாட்டில் வசித்து வந்த இவர், கடந்த இரண்டு மாதங்களாக விடுமுறையைக் கழிப்பதற்காகச் சண்டிலிப்பாயில் உள்ள தனது சொந்த வீட்டிற்கு வந்து...