கிளிநொச்சியில் அதி வேகமாக ஓட்டிய மோட்டார் சைக்கிள் விபத்து! மாணவன் மரணம்!
கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பாடசாலை மாணவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பரந்தன் பகுதியில் மாணவன் தனது துவிச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, பின்னால் அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து துவிச்சக்கரவண்டி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான மாணவன், உடனடியாக மீட்கப்பட்டு கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். விபத்துத் தொடர்பாக மோட்டார் சைக்கிள் ஓட்டி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ் குருநகர் தொழில்நுட்ப கல்லுாரிக்கு முன்னால் வீதியோரத்தில் துாக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம்!
யாழ் குருநகர் தொழில்றுட்ப கல்லுாரிக்கு முன் பகுதியில் வீதியோரத்தில் துாக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் ஒன்று இன்று காலை காணப்படுகின்றது. குறித்த இளைஞன் 34 வயதானவர் என்பதுடன் அப்பகுதியைச் சேர்ந்தவர் எனவும் நேற்று இரவு தனது சகோதரியுடன் சண்டையிட்டுள்ளார் எனவும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றார்கள். இச் சம்பவம் தொடர்பாகப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.
யாழ் விசாரணைக்கு அழைக்கப்பட்ட சுரேஸ் பொலிஸ் நிலையத்தில் மரணம்! நடந்தது என்ன?
யாழ்ப்பாணத்தில் பொலிஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நபர் , பொலிஸ் நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். நாவாந்துறை பகுதியை சேர்ந்த ப. சுரேஷ்குமார் என்பவரே உயிரிழந்துள்ளார். விசாரணைக்காக நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலையத்திற்கு சுரேஷ்குமார் அழைக்கப்பட்ட நிலையில் , பொலிஸ் நிலையம் சென்றிருந்த நிலையில் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அவரை பொலிஸார் உடனடியாக மீட்டு , யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து...
யாழில் பஸ் நிலையத்தில் நின்ற பிறேம்நாத் மீது துரத்தித் துரத்தி வாள் வெட்டு!
யாழ்ப்பாணம் நெல்லியடி பேருந்து நிலையத்தில் மூவர் அடங்கிய குழுவினரால் ஒருவர் மீது கூரிய ஆயுதங்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் படுகாயமடைந்துள்ளார். சம்பவம் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் நெல்லியடி பேருந்து நிலையப் பகுதியில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்தவர் இராஜகிராமம், ஆண்டாள் வளவு, கரவெட்டி பகுதியைச் சேர்ந்த பிறேமதாஸன் பிறேம்நாத் (வயது 28) என அடையாளம் காணப்பட்டுள்ளார். மூவர் அடங்கிய குழுவினர் கூரிய ஆயுதங்களால் அவரை தாக்கியதில் தலை, கை, கால் மற்றும் வயிறு பகுதிகளில் பலத்த வெட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த நபர் முதலில் பருத்தித்துறை...
இன்றைய (19.05.2026) இராசி பலன்கள்
மேஷம் இன்று சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளிடம் இருந்து வந்த மனக்கசப்பு மாறும். குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும். உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த மனகிலேசங்கள் மறைந்து ஒற்றுமை ஓங்கும். பிள்ளைகளிடம் பாசம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9 ரிஷபம் இன்று பெற்றோகள் - உறவினர்களின் அரவணைப்பு அதிகமாகும். பயணங்களில் எதிர்பாராத தடங்கல் உண்டாகலாம். யோசித்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன்தரும். கலைத்துறையினருக்கு புதிய ஆர்டர் விஷயமாக வெளியூர் செல்ல நேரிடும். அதிர்ஷ்ட...
புலம்பெயர் தமிழர்களே அவதானம்! கனடாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த தாய்க்கும் மகளுக்கும் நடந்த கதி!
கனடாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த தாய் மற்றும் பிள்ளைகள் நாடு கடத்தும் ஆபத்தினை எதிர்நோக்கியுள்ளனர். கரீபியன் தீவுகளின் ஹைட்டியைச் (Haiti) சேர்ந்த 26 வயதுடைய பெண் ஒருவர், கடந்த ஜனவரி மாதம் தனது இளம் மகளுடன் கனடாவுக்குள் நுழைந்துள்ளார். அவர் முதலில் அமெரிக்காவுக்குச் சென்று, அங்கிருந்து கனடாவுக்கு வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் விரும்பப்படாதவளாக உணர்ந்த அவர், கியூபெக்கில் (Quebec) ஒரு பாதுகாப்பான வாழ்க்கையை ஆரம்பிக்கலாம் என்ற எண்ணத்தில் கனடாவுக்கு வந்துள்ளார். பனி படர்ந்த வனப்பாதைகள் வழியாக மேற்கொண்ட இந்த அபாயகரமான பயணம் இடர்கள் நிறைந்ததாக இருந்தாலும், கனடா...
யாழ் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் தயாளினி கொல்லப்பட்டது போல் அனுராதபுரத்திலும் நடந்த சம்பவம்!!
அநுராதபுரம் திருப்பனை பிரதேசத்தில் 65 வயது தாயை கொடூரமாக கொலை செய்த மகள் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 32 வயதுடைய இளைய மகளும், அவரின் காதலன் எனக்கூறப்படும் 25 வயதுடைய இளைஞனும் அனுராதபுரம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். உயிரிழந்த தாய் சுமார் 24 வருடங்களாக வெளிநாட்டில் வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணிபுரிந்துள்ளார்.நடத்தப்பட்ட விசாரணைகளில், உயிரிழந்த தாயிடம் இருந்த 10 லட்சம் ரூபா பணம் மற்றும் தங்க நகைகளை கொலைக்கு முன்னர் திருடியுள்ளதாகவும், இவ்வாறு பணம் மற்றும் நகைகளைப் பெற்றுக்கொண்டு வெளிநாடு செல்லும்...
பிருத்தானியாவில் மனைவியை ஆசை தீர அனுபவித்த பின்னர் கொலை செய்து விட்டு இந்தியாவுக்கு தப்பி ஓடிய கணவன்! நடந்தது என்ன?
பிரித்தானியாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு, காரின் பின்பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட 24 வயது இளம் பெண் ஹர்ஷிதா ப்ரெல்லாவின் மரணத்திற்கு நீதி கோரி, அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் வருகை தந்துள்ளனர். கொலை நடந்து 18 மாதங்கள் கடந்த நிலையிலும், கொலையாளியான கணவர் இன்னும் கைது செய்யப்படாததால், பிரித்தானிய மற்றும் இந்திய அரசுகளின் அசமந்த போக்கைக் கண்டித்து குடும்பத்தினர் கதறி அழுது நீதி கோரியுள்ளனர். நார்தாம்டன்ஷையர் (Northamptonshire) பகுதியில் உள்ள கார்பி (Corby) நகரில், கடந்த 2024-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், 24 வயதான ஹர்ஷிதா...
பிருத்தானியாவில் இலங்கைக் குடும்பம் செய்த கேவலமான வேலை! பொறுமையாக இருந்த பக்கத்துவீட்டு வெள்ளைக்காரர் பொங்கியெழுந்தது ஏன்?
பிரித்தானியாவில் வசிக்கும் வெளிநாட்டவர்களின் சில பொறுப்பற்ற நடத்தைகள் காரணமாக, தெற்காசிய மக்கள் அனைவரும் ஒரே மாதிரியாக கணிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. அண்மையில், லண்டனில் வசிக்கும் பிரித்தானிய குடும்பம் ஒன்றின் அண்டை வீட்டில் குடியேறிய குழுவினர், நள்ளிரவைத் தாண்டி அதிகாலை வரை பலத்த சத்தத்துடன் பாடல்களை இசைத்து இடையூறை விளைவித்துள்ளனர். தீபாவளி பண்டிகையின் போதும் அதிகாலையில் பட்டாசுகளை வெடித்து, அண்டை வீட்டாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். அண்டை வீட்டார் இந்தியர்கள் என நினைத்து பிரித்தானிய குடும்பத்தினர் சகிப்புத்தன்மையுடன் இருந்துள்ளனர். எனினும், ஒரு நாள் அதிகாலை 3:30 மணிக்கு...
யாழில் நவீன ரக மோட்டுச் சயிக்கிளில் சென்று சங்கிலி அறுத்தவர்களைத் துரத்திச் சென்று பிடித்த பொலிசார்!
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்கள் , நெல்லியடி ஊடாக தப்பி செல்லும் போது நெல்லியடி பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை பகுதியில் வீதியில் நின்ற பெண்ணொருவரின் ஒரு பவுண் தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அறுத்துக்கொண்டு தப்பி சென்றனர். வீதியில் நின்ற ஏனையவர்கள் மடக்கி பிடிக்க முற்பட்ட போதிலும் அவர்கள் தமது நவீன ரக மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பி சென்றுள்ளனர். இருந்த போதிலும் , மோட்டார் சைக்கிள் இலக்கத்தை குறித்துக்கொண்டுவார்கள் , அது தொடர்பில் பருத்தித்துறை போலீஸாருக்கு அறிவித்துள்ளனர். விரைந்து...










