LATEST ARTICLES

யாழில் நீதிமன்றில் சாட்சியமளித்த இளைஞர் மீது வாள்வெட்டு!

0

யாழ்ப்பாணம்- ஊர்காவற்றுறை நீதிமன்றில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த சம்பவமானது வேலணை அராலிச் சந்தி பகுதியில் இன்று (9) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த இரு தரப்பினருக்கு இடையில் ஏற்கனவே இடம்பெற்றிருந்த பிரச்சினை தொடர்பான வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்த நிலையில், குறித்த வழக்கில் சாட்சியமளிப்பதற்காக பாதிக்கப்பட்ட இளைஞர் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார். வழக்கு நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் அவர் வீடு நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது, வேலணை அராலிச் சந்தி பகுதியில் அவரை வழிமறித்த மற்றைய...

செவ்வந்தியை யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவுக்கு தப்ப வைத்த யாழ்ப்பாண இளைஞன் இவன்தான்!

0

மன்னாரில் கைது செய்யப்பட்ட படகு ஓட்டுநர் விளக்கமறியலில்: இஷாரா செவ்வந்தி இந்தியா தப்பியோட உதவியவர் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முதன்மை சந்தேகநபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி, யாழ்ப்பாணம் அரியாலையில் இருந்து இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல உதவிய படகு ஓட்டுநரை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு தலைமை நீதிவான் அசங்க எஸ். போதரம உத்தரவிட்டுள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 30 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்ட செல்வனேசன் ஜேசுதாசன் அல்லது 'பலசு' என்ற சந்தேகநபரை கொழும்பு குற்றப் பிரிவினர் நீதிமன்றத்தில்...

சினிமா பாணியில் 800 மில்லியன் ரூபாய் கொள்ளை: சூத்திரதாரி முல்லேரியாவில் பிடிபட்டது எப்படி?

0

தலவத்துகொட 800 மில்லியன் ரூபாய் கொள்ளை: சூத்திரதாரி முல்லேரியாவில் கைது! தலவத்துகொட பகுதியிலுள்ள சுற்றுலா மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையமொன்றில், முகமூடி அணிந்த நபர்கள் உள்நுழைந்து, ஊழியர்களை முழந்தாளிடச் செய்து, பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற 800 மில்லியன் ரூபாய் கொள்ளைச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள சூத்திரதாரி மற்றும் வாகன ஓட்டுநரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் முல்லேரியா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் 15.5...

மாநகரசபை ஊழியர் மீது துப்பாக்கிச்சூடு!

0

மொரட்டுவை - ராவத்தாவத்தை பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்றை இலக்கு வைத்து இன்று (9) மாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும் இந்த சம்பவத்தில் முச்சக்கரவண்டி சாரதி எவ்வித காயங்களும் இன்றி தப்பியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அங்குலானை பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் மொரட்டுவை மாநகர சபையின் ஊழியர் என தகவல் வௌியாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மொரட்டுவை பொலிஸ் நிலையத்தினால் இரண்டு விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சினிமாவை மிஞ்சிய சம்பவம்! பொலிஸ் CID யைக் கொல்ல பிரான்ஸ் ரூபனால் போடப்பட்ட பக்கா திட்டம் பிடிபட்டது எப்படி!

0

மறைமுகக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவரைக் கொலை செய்ய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளால் பயன்படுத்தப்பட்ட போலி ஜீப் ஒன்றை, ‘வலன’ மத்திய ஊழல் தடுப்பு அதிரடிப்படை நேற்று (08) கைப்பற்றியுள்ளனர். கடந்த 2025 நவம்பர் 29ஆம் திகதி கிரிந்த கடலோரப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின்போது 325 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள், 8 சந்தேகநபர்கள் மற்றும் 6 வாகனங்கள் கைப்பற்றப்பட்ட சம்பவத்திற்கு குறித்த உளவாளி தகவல் வழங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஓலுகலவின் வழிநடத்தலில் இடம்பெற்ற இந்த நடவடிக்கையில் கைப்பற்றப்பட்ட ஐஸ்...

மட்டு’அவர் காட்டுயானையின் ரவுடிதனம்! மதில் உடைத்து வீடு புகுந்து நெல் மூட்டை கொள்ளை! வீடியோ

0

இன்று அதிகாலை மட்டக்களப்பு தும்பன்கேணியில் மதிலை உடைத்து விட்டின் முன்னாள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல்லை சாப்பிட்ட காட்டுயானை

கிளிநொச்சியில் கோர விபத்து; ஒருவர் உயிரிழப்பு! தப்பியோடிய கார் சாரதி பொலிஸில் சரண்!

0

கிளிநொச்சி ஏ-9 வீதியின் விழாவோடை பகுதியில் இன்று (09.09.2026) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விழாவோடை பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கார்  ஒன்றும் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார். விபத்தையடுத்து, கார்  சாரதி சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்ற நிலையில், பின்னர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

நல்லூரில் சங்கிலி அறுத்த கள்ளி பிடிபட்ட காட்சி இது! வீடியோ

0

நல்லூரில் சங்கிலி அறுத்த கள்ளி பிடிபட்ட காட்சி இது! வீடியோ

சந்திவெளியில் நடந்த விபத்தில் இளைஞன் பலி!

0

இன்று (9) அதிகாலை மட்டக்களப்பு சந்திவெளியில் நடந்த விபத்தில் கிரான்குளத்தைச் சேர்ந்த 22 வயதான இளைஞன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். விபத்துச் சம்பவம் பற்றி தெரியவருகையில்.... மட்டு கிரான்குளத்தைச் சேர்ந்த இளைஞன் பாசிக்குடாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்துவரும் நிலையில் இரவுப் பணியினை முடித்துவிட்டு தனது கிராமத்தில் உள்ள ஆலயம் ஒன்றில் இன்று நடைபெறவுள்ள கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்வதற்காக இன்று அதிகாலை கிரான்குளம் நோக்கி மோட்டார்சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த நிலையில் குறித்த இளைஞன் சந்திவெளி பகுதியால் பயணிக்கும் போது பேருந்து ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியதில் குறித்த இளைஞன்...

நல்லூரில் தாலிக்கொடியை பறிகொடுத்து கதறும் பெண்! மேலும் பல பெண்களின் நகைகள் பறிபோயின! வீடியோ

0

நல்லூர் தேர்த் திருவிழாவில் தாலிக்கொடியைப் பறிகொடுத்துவிட்டு பரிதவிக்கும் தாயார் - விலையுயர்ந்த அணிகலன்களை பறிகொடுத்துவிட்டு காவல்துறையினரிடம் முறைப்பாடளிக்கும் பல பெண்கள்.எச்சரிக்கும் மீறி விலையுயர்ந்த நகைகளை அணிந்து வருவோர், தங்கள் சொத்துகளை இழந்து தவிப்பதோடு ஏனைய பக்தர்களின் மன நிம்மதியையும் இல்லாமல் செய்கிறார்கள். நல்லூரான் தேர்த் திருவிழாவான இன்று முன் வாசலடியில் தாலிக்கொடியை திருடனிடம் பறிகொடுத்து விட்டு தாயொருவர் நிலத்தில் இருந்து அழுதவாறுள்ளார். இவரின் நிலையைப் பார்த்து பலரும் கண்கலங்கினர். இவ்வாறு பல பெண்கள் தங்கள் விலையுயர்ந்த அணிகலன்களை பறிகொடுத்து விட்டு தவித்த வண்ணம் உள்ளார்கள். சிலர்...