யாழில் கள்ள மண் ஏற்றிய உழவு இயந்திரம் மடக்கிப் பிடிக்கப்பட்டது!

0

யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சட்டவிரோதமான முறையில் இரவு நேரத்தில் மணல் ஏற்றிய உழவு இயந்திரம் மருதங்கேணி பொலிசாரால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர் சம்பவம் குறித்து மெலும் தெரிய வருகையில் , கட்டைக்காடு பகுதியில் இரவு நேரத்தில் சில உழவு இயந்திரங்கள் மூலம் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி அருகில் உள்ள கேவில், நித்தியவெட்டை, வெற்றிலைக்கேணி பகுதிகளுக்கு கொண்டு செல்வதாக மருதங்கேணி பொலிசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது இதனடிப்படையில் குறித்த பகுதியை நேற்று(6) இரவு சுற்றிவளைத்த மருதங்கேணி பொலிஸ் பொறுப்பதிகாரி கெலும் பண்டார...

நீண்டகாலம் பொலிஸாருக்கு தண்ணி காட்டிய 54 வயது பத்மா ரஞ்சனி – விசாரணையில் அதிர்ச்சி.!

0

பல வருடங்களாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் “நோனா அம்மா” என அழைக்கப்படும் 54 வயதுடைய பெண் ஒருவர் கிரிபத்கொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பத்மா ரஞ்சனி என அடையாளம் காணப்பட்ட குறித்த பெண், செட்டிகுளத்தைச் சேர்ந்த போதைப்பொருள் வியாபாரி ஒருவருக்கு போதைப்பொருள் விநியோகிப்பதற்காக வந்திருந்தபோது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிரிபத்கொட மற்றும் கொம்பனித்தெரு பகுதிகளைச் சேர்ந்த இவர், நீண்டகாலமாக போதைப்பொருள் தொடர்பான சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாகவும், இதன் காரணமாக “கொம்பனித்தெரு குடுநோனா” என்ற பெயராலும் அழைக்கப்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டபோது,...

திருமண நிகழ்வுக்காக புலம்பெயர் நாட்டிலிருந்து இலங்கை வந்த குடும்பம் மகனை இழந்தது!

0

குவைத்தில் இருந்து உறவினர் வீட்டு திருமண நிகழ்வுக்காக இலங்கைக்கு வந்த குடும்பம் ஆசை மகனை இழந்த சோகம் அடுத்த வாரம் மீண்டும் குவைத் திரும்பத் தயாராகி கொண்டிருந்த நிலையில் பெரிய சோகம் வெலிகம பிரதேசத்தில்…. நான்கு வயது சிறுவன் …. பிளாஸ்டிக் போத்தல் மற்றும் வலை பயன்படுத்தி மீன் பிடிக்க சென்றதாக கூறப்படுகிறது… சிறுவன் , எதிர்பாராத விதமாக ஆற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கியுள்ளார். சிறுவனைக் காணவில்லை என பெற்றோர் மற்றும் உறவினர்கள் பதற்றத்துடன் தேடிய நிலையில், பின்னர் ஆற்றில் கண்டு பிடிக்கப்பட்டார். உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதிலும், சிறுவனை காப்பாற்ற...

யாழில் சங்கிலி அறுத்த கொள்ளையன் கணனி இஞ்சினியரா?

0

யாழ் சிறுப்பிட்டிப் பகுதியில் கடந்த ஓரிரு நாட்களுக்கு முன் கடை ஒன்றில் பொருட்கள் வாங்குவது போல் நடித்து அங்கு நின்ற பெண்ணின் சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடியவன் பெரும் பொம்பிளைக் கள்ளன் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இவன் சங்கிலி அறுத்து பிடிபட்ட புகைப்படம் வெளியாகிய பின்னர் இவனிடம் ஏமாந்த சில மாணவிகளின் பெற்றோர் இது தொடர்பாக வம்பனிற்கு பல தகவல்களை வழங்கியுள்ளனர். பெற்றோர்களின் கைத் தொலைபேசியில் ன்லைன் வகுப்புச் செயற்பாடுகளில் ஈடுபடும் மாணவிகளின் வட்சப் குறுாப் போன்றவற்றுக்குள் இவன் ஊடுருவி கொழும்பில் பிரபல நிறுவனம்...

முல்லைத்தீவில் சைக்கிளில் சென்ற மாணவன் விபத்தில் பலி!!

0

முல்லைத்தீவு துணுக்காய் பகுதியில் வீதியோரமாக சைக்கிளில் சென்று கொண்டிருந்த மாணவன் அதி வேகமாக சென்ற ஆட்டோ மோதியதில் மரணமாகியுள்ளான். யாழ் போதனா வைத்தியசாலையில் கடும் காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட குறித்த மாணவன் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளதாகத் தெரியவருகின்றது. இதனிடையே மாணவன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நேரத்தில் மாணவனின் பெற்றோருடன் குறித்த ஆட்டோச்சாரதியான காவாலியின் தரப்பினர் சமரசம் செய்ய முற்பட்டதாகவும் தெரியவருகின்றது.  குறித்த ஆட்டோவை ஓட்டிச் சென்ற சாரதியான காவாலி போதையில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

தமிழ் குடும்பப் பெண் பாம்பு கடித்து பலி!

0

புசல்லாவை, கலுகள்ள தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 42 வயதுடைய பெண் ஒருவர் பாம்பு கடிக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இந்த சோகச் சம்பவம் நேற்று (05.09.2026) காலை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேயிலை மலையில் தொழிலில் ஈடுபட்டிருந்த குறித்த பெண், பாம்பு கடிக்கு இலக்கான நிலையில் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோதும் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பாம்பு கடி, குளவி கொட்டு, சிறுத்தை தாக்குதல் மற்றும் யானை தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு ஆபத்துகளுக்கு மத்தியில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், இவ்வாறான சம்பவங்களில் பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கு உரிய நட்டஈடு...

யாழில் வீட்டிலிருந்து சடலம் அழுகிய நிலையில் மீட்பு !

0

யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றினுள் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து, அயலவர்கள் கோப்பாய் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து குறித்த வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் சடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இந்தநிலையில், சடலமாக மீட்கப்பட்டவர் ஓரிரு தினங்களுக்கு முன்பே உயிரிழந்திருக்கலாம் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில் மேலதிக விசாரணைகளின் பின்னர் அவை தொடர்பில் தெரிவிக்க முடியும் என காவல்துறையினர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழர் பகுதியில் சம்பவம்! ஹேரோயின் போதைப்பொருளுடன் பிடிபட்ட வர்த்தகரை விடுவிக்க பணமும் அவனது மனைவியை அனுபவிக்க கேட்ட பொலிஸ் அதிகாரி பதவி நீக்கம்!

0

திருகோணமலையில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி ஒருவரை விடுதலை செய்வதற்காகப் பணத்தையும், அவரது மனைவியை பாலியல் இலஞ்சமாகவும் கோரிய குற்றச்சாட்டில் மட்டக்களப்பு, கல்குடா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் உப பரிசோதகர் ஒருவர் சனிக்கிழமை (05) முதல் சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஓட்டமாவடி பகுதியைச் சேர்ந்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை உடனடியாகப் பணி இடைநீக்கம் செய்யுமாறு பொலிஸ் தலைமையகம் அறிவித்தல் விடுத்துள்ளதாகப் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கடந்த 2021ஆம் ஆண்டு குறித்த உத்தியோகத்தர் திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய போது, ஹெரோயின்...

நுவரெலியா நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

0

நுவரெலியா, நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சி அமைந்துள்ள பகுதியில் ஆற்றில் குளிக்கச் சென்ற இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிறு விடுமுறையைக் கழிப்பதற்காகவும், இயற்கையை ரசிப்பதற்காகவும் ஆற்றுக்குச் சென்ற இந்த இளம் உயிர்கள், நீரின் ஆழம் மற்றும் சுழியோட்டப் பகுதிகளை அறியாமல் இறங்கியதன் காரணமாக இந்தத் துயர விபத்து நேர்ந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவர் நானுஓயா பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞரும், மற்றையவர் ஹப்புத்தளை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரும் ஆவர்.

கிளிநொச்சியில் தாத்தா செலுத்திய வாகனத்திற்குள் ஓடிச்சென்ற குழந்தை சில்லில் நசியுண்டு பலி!

0

கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகர் பகுதியில் வீட்டு முற்றத்தில் நின்ற கப்ரக வாகனத்தை குழந்தையின் தாத்தா செலுத்திய நேரம் வாகனத்திற்குள் ஓடிச்சென்ற குழந்தை வாகன சில்லில் நசியுண்டு உயிரிழந்துள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம் – சிவநகர் பகுதியில், வாகனத்தில் சிக்கி ஒன்றரை வயதுடைய பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. இந்தச் சம்பவம் இன்று(05) காலை இடம்பெற்றுள்ளது வீட்டு முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்ரக வாகனத்தை குழந்தையின் தாத்தா செலுத்தியபோது, குழந்தை எதிர்பாராத விதமாக வாகனத்தின் அருகே ஓடிச் சென்றதாகவும், இதன்போது வாகனத்தின் சில்லில் சிக்கி படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதில்...