Home செய்திகள் மன்னார் முருங்கனில் றெமியைக் காணவில்லை! பொலிசாரிடம் முறையீடு!

மன்னார் முருங்கனில் றெமியைக் காணவில்லை! பொலிசாரிடம் முறையீடு!

மன்னார் முருங்கன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாழ்க்கைப் பெற்றான் கண்டல் கிராமத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரை காணவில்லை என இன்றைய தினம் வியாழன்(16) முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வாழ்க்கைப் பெற்றான் கண்டல் கிராமத்தைச் சேர்ந்த சிறில் என அழைக்கப்படும் அந்தோணி றெமி (வயது 48 ) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு காணாமல் போய் இருப்பதாக அவரது சகோதரியினால் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்றைய தினம்(15) காலை வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் இது வரை வீடு திரும்பவில்லை என
முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர் தொடர்பான மேலதிக விவரங்கள் தெரிந்தவர்கள் முருங்கன் பொலிஸ் நிலையம் அல்லது அவரது உறவினர்களின் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொலைபேசி இலக்கம்.
0770699042
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply