Home செய்திகள் நாடாளுமன்ற உறுப்பினர்களை நேரடியாக தொடர்புகொள்ள மக்களுக்கு வாய்ப்பு

நாடாளுமன்ற உறுப்பினர்களை நேரடியாக தொடர்புகொள்ள மக்களுக்கு வாய்ப்பு

இலங்கை நாடாளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் (www.parliament.lk), கடந்த 19 வருட சேவையில் மூன்றாவது தடவையாக, புதிய அம்சங்களுடன் நவீனமயமாக்கப்பட்டு அண்மையில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

தேசிய ஜனநாயக நிறுவகத்தின் (NDI) முழுமையான அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சீரமைப்பு, மேம்படுத்தப்பட்ட அணுகல் மற்றும் நவீன தேவைகளைப் பூர்த்தி செய்யும் பல புதிய அம்சங்களைக் கொண்டுள்ளது.

இதில் முக்கியமாக, “எனது நாடாளுமன்றம்” (“My Parliament”) என்ற புதிய பகுதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.(https://www.parliament.lk/ta/my-parliament/user-registration)

இதன் மூலம் ஒவ்வொரு பிரஜையும் நாடாளுமன்றத்துடனும், நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் நேரடியாக தொடர்புகொள்ள முடியும்.

பொதுமக்கள் இந்த இணையதளத்தில் பதிவு செய்வதன் மூலம் நாடாளுமன்றத்தினால் வழங்கப்படும் சேவைகளை எளிதாக அணுகும் வாய்ப்பைப் பெறுவார்கள் என நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் இந்த இணையத்தளம் இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here