திருகோணமலை–மட்டக்களப்பு பிரதான வீதியில் உள்ள சீனக்குடா பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற கோர விபத்தில், ஜமாலியாவை சேர்ந்த 27 வயது இளைஞர் ராசித் உயிரிழந்தார் இவர் திருகோணமலையில் நன்கு அறியப்பட்ட உதைப்பந்தாட்ட வீரர் ராஜ்கபூர் அவரின் மகனும் ஆவார் .
மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது, இராணுவ வாகனம மோதியதில் இவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார்.இவர் திருமணம் செய்து ஒரு மாதம்கூட ஆகவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.இவ்விபத்து தொடர்பான விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.













