Home செய்திகள் யாழில். புதுவகை மோசடி – மக்களை விழிப்பாக இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தல்

யாழில். புதுவகை மோசடி – மக்களை விழிப்பாக இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தல்

யாழ்ப்பாணத்தில் , உடைந்த தொலைபேசியை வைத்து ,நபர்களிடம் பணம் பறிக்கும் மோசடிக்காரன் தொடர்பில் மக்களை விழிப்புடன் இருக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் வோகோ ரக மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் நபர் ஒருவர் , ஆள் நடமாட்டம் அற்ற வீதிகளில் காத்திருந்து , வீதியில் தனியாக வரும் நபர்களை இலக்கு வைத்து , அவர்களை பின் தொடர்ந்து முந்தி சென்று , பின் வீதியோரமாக நின்று , அவர்களை முந்தி செல்ல விட்ட பின்னர் , பின்னர் மீண்டும் அவர்களை துரத்தி சென்று , வீதியில் தனது கைபேசி தவறி விழுந்ததாகவும் , அதற்கு மேலால் மோட்டார் சைக்கிளை நீங்கள் ஏற்றியதால் தனது தொலைபேசி உடைந்து விட்டதாக கூறி தர்க்கம் புரிந்து அவர்களிடம் பணம் பறித்து வருகின்றார்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ள நிலையில் , கண்காணிப்பு காமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் குறித்த நபரை அடையாளம் கண்டுள்ள நிலையில், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இருந்த போதிலும் குறித்த நபரை இதுவரையில் கைது செய்ததால் , நபரால் பாதிக்கப்பட்டாலோ , அல்லது நபர் தொடர்பில் தகவல் அறிந்தாலோ அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். அதேவேளை ,இப்படியான நபர்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here