யாழ் பல்கலைக்கழக சித்திவைத்தியத்துறை விரிவுரையாளர் தயாளினி திலீபன் கொலைச் சம்பவத்தில் முதலாவது சந்தேகநபரான மருமகன் சார்பாக பெண் சட்டத்தரணி சர்மினி ஆயராகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் இரண்டாவது சந்தேகநபரான மகள் சார்பாக சிங்கள சட்டத்தரணி ஒருவா ஆயராகியுள்ளார்.
யாழ் நீதிமன்றில் நேற்ற நடைபெற்ற தயாளினி வழக்கில் மருமகன் சார்பாக ஆயரான லோயர் சர்மினி, தனது கட்சிக்காரர் தொடர்பாக தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் அவரை ஊடகங்கள் மற்றும் சமூகவலைத்தளங்கள் பிழையான நபராக காட்டுவதாகவும் ஆகவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளாரர்.
இதே வேளை உடல் சாவகச்சேரி நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் மறுவன்புலவுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை யாழ் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. ஆனால், மிக முக்கியமான மரண விசாரணை அறிக்கை இன்னமும் அனுப்பப்படவில்லை.
வழக்கு விசாரணைகளைத் தொடர்ந்து மகளும் மருமகனும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.















