Home செய்திகள் மட்டு’வில் விபத்து! தொழில்நுட்ப கல்லூரி மாணவன் கிசாளன் பலி!

மட்டு’வில் விபத்து! தொழில்நுட்ப கல்லூரி மாணவன் கிசாளன் பலி!

இன்று மட்டு கிரானில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி உயிரிழந்த மட்டு தொழில்நுட்பக் கல்லூரி மாணவன்

இன்று மதியம் இரண்டு மணியளவில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் கும்புறுமூலைச் சந்தியில் மோட்டார்சைக்கிள் மற்றும் டிப்பர் என்பன மோதி இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தில் உயிரிழந்தவர் மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரியின்( Ref&AC Technician) கற்கை நெறியினை தொடர்ந்து கொண்டிருக்கும் கிரானைச் சேர்ந்த சுரேந்திரன் கிசாளன் என்பவராகும்

மிகுந்த கெட்டித்தனமான ஒழுக்கம் மிக்க இம் மாணவன் நாளை தனது பாடநெறியைப்பூர்த்தி செய்து அதற்கான நைற்றா பயிற்சி கடிதத்தை பெற்று பயிற்சியை தொடர இருந்தவர் என தெரிவிக்கப்படுகிறது

இம் மாணவனுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்

விபத்து காணொளி இணைப்பு

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here