Home செய்திகள் யாழ் வடமராட்சி கிழக்கு கடலில் குளித்தவர்களுக்கு நடந்த பயங்கரம்!! Photos

யாழ் வடமராட்சி கிழக்கு கடலில் குளித்தவர்களுக்கு நடந்த பயங்கரம்!! Photos

இது ஒரு சமூகவிழிப்புணர்வுக்காக வெளியிடப்பட்ட பதிவாகும்… 
நேற்று (2025.12.14) ஞாயிற்றுக்கிழமை உடைகள் சேகரித்தல் செயற்பாட்டினை மருதங்கேணி, உடுத்துறை மற்றும் வடமராட்சி ஆகிய இடங்களில் மேற்கொள்ளும் போது பொழுதுபோக்கிற்காகவும், ஒரு ஓய்விற்காகவும் எமது சோலைப் பறவைகள் இளைஞர் அமைப்பின் அணியினர் நாம் தாளையடி கடற்கரையில் விளையாடிக் கொண்டு இருந்தோம்…
நாங்கள் சென்று சிறிது நேரத்தில் அங்கு ஏற்கனவே குளித்துக் கொண்டிருந்த இளைஞர்கள் இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு கொண்டிருந்தனர் எமக்கு அந்த சந்தர்ப்பத்தில் என்ன செய்வது என்று எதுவுமே தெரியவில்லை உதவி அழைப்புகளை நாடிய போது அவர்களிடம் இருந்தும் எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லை எம் கண் முன்னே இரு உயிர்கள் துடிப்பதை கண்டு துவண்டு போனோம்…
சிறிது நேரத்தில் வெளியில் இழுத்து வரும் அலை அடித்து இவர்களை வெளியில் தள்ளியது அவர்களின் கவனத்தை திருப்பி நாங்கள் குரல் கொடுத்து அவர்களை கரைக்கு வர செய்து ஒரு மாதிரியாக செல்லக் கூடிய தூரம் வரை சென்று அவர்களை கரைக்கு கொண்டு வந்து விட்டோம்…
அவர்களின் நண்பர்கள், வேறு சிலர் என்று அதிகமானோர் அங்கு நின்றனர் இருந்தும் எவரும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பது கவலைக்குரிய ஒரு விடயமாக நான் பார்த்தேன்…
கரைக்கு கொண்டு வந்த போது தான் தெரிந்தது அதில் ஒரு நபர் மயக்க நிலையில் இருப்பது நான் அந்த நேரம் தான் நான் பெருமை கொண்டேன் நான் கற்று கொண்டது ஒரு உயிரை காப்பாற்றுகிறது என்று…
அவருக்கு என்னால் முடிந்த முதலுதவியை வழங்கி நினைவுக்கு கொண்டு வந்தேன் மயக்கம் தெளிந்து அந்த நபர் கேட்ட கேள்வி இன்னும் என் காதில் கேட்கிறது…
மற்றவனின் பெயர் கூறி அவன் தப்பி விட்டானா…
அந்த நேரத்தில் நாங்கள் மட்டும் அவ்விடத்தில் இல்லை என்றால் அந்த இரு உயிர்களும் இப்பொழுது இவ்வுலகில் இல்லை….
இறுதியில் அந்த இளைஞன் கூறினான் சோலைப் பறவைகள் இளைஞர் அமைப்பு செத்தாலும் நான் உங்களை மறக்க மாட்டேன்…
தயவு செய்து வேடிக்கை பார்க்காதீர்கள் உங்களால் முடிந்ததை செய்ய முயற்சி செய்யுங்கள் இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு உயிர்களும் முக்கியம் என்பதை உணருங்கள்😔🥹
இந்த அனர்த்த நேரங்களில் கடல்களுக்கு செல்வதை முடிந்த வரை தவிர்த்து கொள்ளுங்கள் உங்களை எதிர் பார்த்து உங்கள் வீடுகளில் உங்கள் குடும்பம் உள்ளது என்பதை மனதில் வையுங்கள் உறவுகளே🙏🙏
இந்த நேரத்தில் எனக்கு முதலுதவி பயிற்சியை வழங்கிய பயிற்றுவிப்பாளர் Srikanth அண்ணா Srikanth Sri அவர்களுக்கும் அதற்கு அடித்தளமாக இருந்த இலங்கை செஞ்சிலுவை சங்க குழுமத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்…🙏🙏
குறிப்பு:-முடிந்த வரை அனைவரும் முதலுதவியை தெரிந்து வைத்து கொள்ளுங்கள் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு உயிர் காக்க உதவும்
இதில் உள்ள புகைப்படங்கள் அனைத்தும் ஆரம்பத்தில் எடுக்கப்பட்டவை முதலுதவியின் போது எடுக்கப்பட்டவை அல்ல விமர்சன கருத்துக்களுடன் தயவு செய்து எவரும் வராதீர்கள்🙏🙏
-Kujinthan Thankarasa-
SriLanka Red Cross Society
Kilinochchi Branch
(Volunteer)
சோலைப்பறவைகள் இளைஞர் அமைப்பு
(Board Member)
May be an image of one or more people, ocean, beach, water and text that says "と -"May be an image of one or more people and beachMay be an image of one or more people, people playing American football, people playing volleyball, people playing football, beach and text
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply