யாழில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 2 பேர் பலியாகியுள்ளாதாகத் தெரியவருகின்றது. இவர்கள் கிளிநொச்சி வட்டக்கச்சிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது. டிப்பர் வாகனம் கள்ள மண் ஏற்றிச் சென்ற போது சாவகச்சேரிப் பொலிசார் துரத்திச் சென்ற வேளையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது.
குறித்த விபத்தில் வட்டக்கச்சி பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய ராஜீவன் விதுசன் மற்றும் அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய நாகராஜா ஜீவராஜ் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.


இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.













