பிருத்தானியாவின் லிவர்பபூல் பகுதியில் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் வவுனியா முகத்தான்குளம் பகுதியை வசிப்பிடமாகவும் கொண்ட நிலானி நிமலராஜா எனும் 44 வயதான 3 பெண் பிள்ளகைளின் தாயான குடும்பப் பெண் பூட்டில் எனும் பகுதியில் வைத்து 47 வயதான கணவன் நிமலராஜாவால் 20.06.2025 அன்று குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு தற்போது நடைபெற்று வருகின்றது.
நிமலராஜா போதைக்கு அடிமையானவர் எனத் தெரியவருகின்றது. இதன் காரணமாக நிறை வெறியில் வந்து மனைவி, பிள்ளைகளை தொடர்ச்சியாக தாக்கி வந்ததால் நிலானி பொலிசாரிடம் முறையிட்டு நிமலராஜாவை வீட்டில் இருந்து துரத்தியுள்ளார். அத்துடன் மூத்தமகள் மற்றும் நிலானி செல்லும் பகுதிகளுக்கே தலை காட்டக்கூடாது என லண்டன் நீதிமன்றம் ஏற்கனவே தடை விதித்திருந்தது .
இந் நிலையில் 2 வது மகளின் பூப்புனித நீராட்டு விழாவுக்கு நிலானி தனது கணவனை அழைக்கவில்லை. அத்துடன் அவளது ஏனைய கொண்டாட்டங்களுக்கும் கணவனை நிலானி அழைக்கவில்லை. இதனால் நிமலராஜன் கடும் கொலை வெறியில் காணப்பட்டுள்ளான். இதன் பின்னர் மனைவியைக் கொலை செய்யும் நோக்கில் அஜ்ரா பல்பொருள் அங்காடியில் கத்திகளையும பவுங்லிங் கடையில் ஒட்டும் நாடாவையும் வாங்கியுள்ளார் நிமலராஜா. கத்திகளை வாங்கும் போது தனது அடையாளத்தை மறைக்க முகக்கவசம் அணிந்துள்ளார். அதன் பின்னர் நிலானி வேலை செய்த லோக்கோஸ்ட் அன்ட் பூட்வைன் எனும் கடைக்கு சென்றுள்ளார். அங்கு வாடிக்கையாளர்கள் இல்லாத நேரம் உள்ளே புகுந்த நிமலராஜா நிலானியின் தலை மற்றும் நெஞ்சுப் பகுதியில் சமாரியாக 18 முறை குத்தியுள்ளார். தாக்குதலின் வேகத்தில் நிமலராஜா வைத்திருந்த கத்தியின் நுணிப்பகுதி வளைந்து நெளிந்துவிட்டதாக நீதிமன்றில் பொலிசார் தெரிவித்திருந்தனர். நிமலராஜா கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு நீதிமன்றில் ஆயர்ப்படுத்தப்பட்ட போதும் தற்போதுவரை நிமலராஜா தனது குற்றத்தை ஒப்புக் கொள்ளவில்ல என தெரியவருகின்றது. கடந்த வாரமும் நீதிமன்றில் நிமலராஜா தொடர்பான வழக்கு நடைபெற்றுள்ளது.
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.













